நீங்கள் செகண்ட் ஹேண்ட் கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா..? அப்படி என்றால் பிரச்சனை ஏதுமில்லாத சரியான காரை தேர்வு செய்து வாங்க அதிக முயற்சி தேவை.
ஏற்கனவே ஒருவர் பயன்படுத்திய காரை வாங்க ஒரு பெரும் தொகையை முதலீடு செய்யும் முன், நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஒரிஜினல் பேப்பர்களை சரிபார்க்க வேண்டும்
செகண்ட் ஹேண்ட் கார் வாங்க காட்டும் அவசரத்தில் பலரும் காரின் ஒரிஜினல் பேப்பர்களை முழுவதுமாக சரிபார்க்க மறந்து விடுகின்றனர். ஒரு செகண்ட் ஹேண்ட் காரை வாங்கி நம் வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு முன், அதன் ஹிஸ்ட்ரியை சரிபார்ப்பது அவசியம். இது பல சட்டச் சிக்கல்களில் இருந்து நம்மை காப்பாற்றும். கார் உண்மையில் விற்பவருக்கு சொந்தமானது தானா அல்லது வேறு ஏதேனும் சிக்கல் இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும்.
ஓடோமீட்டர் டேம்பரிங்
செகண்ட் ஹேண்ட் கார் வாங்கும் போது பலரும் ஏமாறும் விஷயமாக ஓடோமீட்டர் டேம்பரிங் உள்ளது. கார் பல்லாயிரம் அல்லது பல லட்சம் கிலோ மீட்டர் ஏற்கனவே ஓடி இருந்தாலும், அசல் கிலோ மீட்டரை காட்டாமல் அதை விட குறைவான கிலோ மீட்டர் மட்டுமே ஓடியிருப்பது போன்ற லெவலை அனலாக் மீட்டரில் செட் செய்து வைத்திருப்பார்கள். தனது கார் குறைந்த கிலோ மீட்டர் மட்டுமே ஓடியிருக்கிறது என்று ஒரு விற்பனையாளர் ஓடோமீட்டர் டேம்பரிங் செய்திருக்கலாம் என்பதால் கவனம் தேவை.
நிபுணரிடம் ஆலோசனை
நீங்கள் ஒரு செகண்ட் ஹேண்ட் காரை வாங்க குறிப்பிட்ட வாகனத்தை ஓட்டி டெஸ்ட் செய்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அப்போது நன்றாக இயங்கும் கார் அதன் பின் எதிர்பாராதவிதமாக பழுதாகி, பெரிய செலவு வைத்தால் என்ன செய்வது..? எனவே வெளிப்புற லுக்கிற்கு மயங்கி காரை வாங்காமல் உங்களுக்கு பிடித்த காரை உங்களுக்கு நன்கு தெரிந்த மெக்கானிக்கை வைத்து கார் நல்ல கண்டிஷனில் நன்றாக இருக்கிறதா? குறிப்பிட்ட விலைக்கு நம்பி வாங்கலாமா என்ற ஆலோசனையை பெறுங்கள்.
ஆன்லைனில் செக் செய்யவும்
நீங்கள் வாங்க நினைக்கும் ப்ரீ-ஓன்ட் காரை விற்பவர் அளிக்கும் அனைத்து கிளெயிம்களையும் சரிபார்க்க வேண்டும். உங்கள் விருப்பமான காரின் சரியான சந்தை மதிப்பை தீர்மானிக்க, ஆன்லைனில் விலை மற்றும் மார்க்கெட் வேல்யூவை சரிபார்க்கலாம்.