fbpx

உங்களுக்கு அதிகமான வியர்வை வருகிறதா?… கொசுக்கள் உங்களை விடவே விடாது!… ஏன் தெரியுமா?

டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருகிறது. காரணம் மழைக்காலம் ஆரம்பமாகி விட்டது. இந்த காலத்தில் தான் கொசுக்களின் ஆதிக்கம் அதிகமாக காணப்படும். மேலும் இந்த டெங்கு கொசுக்கள் எல்லாரையும் கடிக்காது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்.. அதுதான் உண்மை. இன்னும் சொல்லப்போனால், யாருக்கு அதிகமாக உடல் வியர்க்கிறதோ அவர்களை தான் இந்த கொசு கடிக்கிறது. இதுகுறித்து, இத்தொகுப்பில் நாம் விரைவாக தெரிந்துகொள்ளலாம்..

பொதுவாகவே நமக்கு அதிகமாக வியர்க்கும் போது உடலில் ஒரு விதமான ரசாயனம் சுரக்கும். மேலும், அந்த ரசாயனம் கொசுக்களை ஈர்க்கிறது. எனவேதான், கொசுக்கள் அதிகம் வியர்க்கும் நபர்களை தேடிப்போய் கடிக்கிறது. இன்னும் சொல்லப் போனால் ஓடியாடி விளையாடும் குழந்தைகளுக்கு அதிகம் வியர்க்கும். அதுபோல், கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில், உடல் எடை கூடும்போது உடலில் வெப்பமும் அதிகமாகிறது. இதனால் அவர்களுக்கு வியர்வை அதிகமாக வரும். அதனால் இந்த கொசுக்கள் இவர்களை அதிகமாக கடிக்கிறது.

பொதுவாகவே, இந்த டெங்கு கொசுக்கள் பகலில் தான் அதிகம் கடிக்கிறது. அதுவும் குறிப்பாக கைமுட்டி கால் முட்டி கணுக்கால் ஆகிய பகுதிகளில் தான் அதிகமாகக் கடிக்கிறது. காய்ச்சல், எலும்புகளில் வலி, அசௌகரியம், தசை வலி, உடல் அசதி, கண்கள் சிவந்து போதல், வாந்தி, மயக்கம் ஆகியவை பொதுவான அறிகுறியாகும். எனவே டெங்கு காய்ச்சல் வருவதை தடுக்க, கொசுக்கடியில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

கொசு உங்களை கடிக்காமல் இருக்க, முழு கை கால்களை மூடும் உடையை அணியுங்கள். குறிப்பாக, உங்கள் கைக்குழந்தைக்கு இந்தமாதிரியான உடையை அணிவியுங்கள். அதுபோல், விவரம் தெரிந்த குழந்தைக்கு கொசு கடிக்காமல் கை, கால்களில் க்ரீம் தடவலாம் அல்லது முகத்துக்குப் போடும் பவுடரை தடவலாம் இப்படி செய்தால் கொசு கடியில் இருந்து தப்பிக்கலாம்.

Kokila

Next Post

"சுற்றுலா சென்ற காதலர்கள்." காதலன் கண் முன்னே கூட்டு பாலியல் பலாத்காரம்.! 2 பேர் கைது.!

Sat Nov 25 , 2023
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் கேரளாவில் கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இரண்டு நபர்களை கைது செய்திருக்கும் காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 21 வயது இளம் பெண் தனது காதலருடன் கேரள மாநிலத்திற்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அந்தப் பெண்ணின் காதலன் தனது நண்பனையும் அழைத்துக் கொண்டு கடல் ஆறுடன் கலக்கும் […]

You May Like