உடல் எடையை குறைக்க குங்குமப்பூ தண்ணீர் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். குங்குமப்பூ தண்ணீரை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
அனைத்து விதமான சருமப் பராமரிப்பு பொருள்களிலும் குங்குமப்பூ உட்பொருளாக சேர்க்கப்பட்டு வருகிறது. குங்குமப்பூவை அடிக்கடி சாப்பிட்டு வருவதன் மூலம், பல்வேறு நன்மைகளை நம்மால் பெற முடியும். குங்குமப்பூவை சரியான அளவில், சரியான முறையில் எடுத்துக் கொள்ளும் போது, உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் குறைந்து, உடல் எடையை மிக வேகமாக குறைப்பதற்கு உதவி செய்கிறது. அதிலும் குறிப்பாக உடல் எடையை குறைப்பதற்கு குங்குமப்பூ தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது.
நம் உடலின் மெட்டபாலிசத்தை குங்குமப்பூ தூண்டுகிறது. மேலும் இது பசியைக் கட்டுப்படுத்தி, வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்தி விடும். பின், அடுத்த வேளை எடுத்துக் கொள்ளும் அதிகப்படியான கலோரிகளை குறைக்கவும் செய்கிறது. குறிப்பாக, உணவு சாப்பிடுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக, குங்குமப்பூ டீயை குடிப்பதன் மூலம் பசியைக் கட்டுப்படுத்தி, வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இதனால், அதிகமான உணவை சாப்பிடுவது கட்டுப்படுத்தபட்டு, உடலின் எடைக் குறைப்பைத் தூண்டுகிறது. இதன் காரணமாக உடல் எடையானது மிக வேகமாக குறைந்து விடும்.
தேவையானப் பொருள்கள்: குங்குமப்பூ – 2 மி.கிராம், தேன் – 1 டீஸ்பூன், எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் தண்ணீர் – 1 கப். செய்முறை: ஒரு கப் தண்ணீரை கொதிக வைத்து, 1 முதல் 2 மி.கிராம் அளவு குங்குமப்பூ சேர்த்து ஒரு தட்டினை கொண்டு மூடி வைத்துக் கொள்ள வேண்டும். ஏறக்குறைய 5 நிமிடங்கள் கழித்து திறந்து பார்த்தால், நல்ல நறுமணத்துடன் குடிக்கின்ற நிலையில் குங்குமப்பூ டீ தயாராகி விடும். இதனை அப்படியேயும் குடிக்கலாம். இல்லையெனில், இதோடு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்தும் குடிக்கலாம். இந்தத் தேநீரை வெறும் வயிற்றில் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குங்குமப்பூ டீயை காலையில் ஒரு கப்பும், இரவில் ஒரு கப்பும் எடுத்துக் கொள்ள வேண்டும்.