fbpx

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… இயக்குனர் வில்சன் மனைவி வழக்கறிஞர் விளக்கம்…!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இயக்குனர் வில்சன் மனைவி பணம் தரவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் காவல்துறை விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியது. ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணன் வெளிநாடு தப்பியதாக கூறப்படுகிறது. அவருடன் திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா போனில் பேசி இருந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து அவர், கிருஷ்ணனுக்கு ஏதேனும் அடைக்கலம் கொடுக்க உதவினாரா என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்தது. இதை அடிப்படையாக வைத்தே மோனிஷாவிடம் விசாரணை நடத்தினர்.

நெல்சன் மனைவி தரப்பு வழக்கறிஞர்:

மோனிஷா மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வெளியாகி உள்ளன. வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் தொடர்பாக காவல் துறை கேட்ட விளக்கத்தை மோனிஷா வழங்கியுள்ளார். இந்த விவகாரத்தில் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். மொட்டை கிருஷ்ணனுக்கு பணம் எதுவும் அவர் தரவில்லை. நிதியுதவி செய்ததாக வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானவை. உண்மைக்கு புறம்பானவை. மோனிஷா மற்றும் அவரது கணவர் இயக்குநர் நெல்சனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான தவறான மற்றும் ஆதாரமற்ற தகவல்களை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

English Summary

Armstrong’s murder case… Director Wilson’s wife’s lawyer explains

Vignesh

Next Post

இன்னும் சில மணி நேரங்களில்..!! கட்சிக் கொடியை அறிமுகம் செய்கிறார் தவெக தலைவர் விஜய்..!!

Thu Aug 22 , 2024
Actor Vijay is introducing the party flag and song of the Tamil Nadu Victory Club today (August 22).

You May Like