நடிகர் சோனு சூட்டை கைது செய்ய லூதியானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லூதியானாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் கன்னா, மோஹித் சுக்லா என்பவர் மீது ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக வழக்கு தொடர்ந்தார். அதில், போலி ரிஜிகா நாணயத்தில் முதலீடு செய்ய தன்னை ஈர்த்ததாகவும், இந்த வழக்கில் சோனு சூட்டிற்கும் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கு விசாரணைக்காக சோனு சூட் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டார். ஆனால், அவர் ஆஜராகாததால், அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. லூதியானா நீதிமன்றம் தனது உத்தரவில், மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள ஓஷிவாரா காவல் நிலைய அதிகாரிக்கு சோனு சூட்டை கைது செய்ய உத்தரவிட்டது.
அதில், சோனு சூட்டுக்கு முறையாக சம்மன் அல்லது வாரண்ட் அனுப்பப்பட்டுள்ளார். ஆனால், அவர் ஆஜராகத் தவறிவிட்டார். எனவே, அவரை கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என குறிப்பிட்ட காவல்நிலையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை வரும் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.