தமிழ்நாடு முழுவதும் மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலேயே மின்சார முகாம்களை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு கட்டமாக இன்று சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. ஆன்லைனில் மாற்றங்களை செய்ய கஷ்டப்படும் நபர்கள் இதில் நேரடியாக மின்சாரத்துறை சார்ந்த சேவைகளை பெற முடியும். நேரடியாக மின் அலுவலகங்களுக்கு செல்ல முடியாதவர்கள் இதில் எளிதாக மாற்றங்களை செய்ய முடியும். அதற்காக இன்று நடக்கும் சிறப்பு முகாமில் 6 சேவைகள் வழங்கப்படுகின்றன.
புதிய மின் இணைப்பு வாங்குதல், மின் இணைப்பில் பெயர் மாற்றுதல், மின் இணைப்பை வேறு இடத்திற்கு மாற்றுதல், மின் இணைப்பை துண்டித்தல், மின் கட்டண விகித மாற்றம், மின் இணைப்பின் பேசை மாற்றுதல் உள்ளிட்ட 6 சேவைகளை வழங்கப்பட்ட உள்ளது. இந்த 6 சேவைகளையும் சிறப்பு முகாம்களில் மாற்றிக்கொள்ள முடியும்.
சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் முதல் கட்டமாக இந்த முகாம்கள் இன்று நடக்கின்றன. வரும் நாட்களில் மாற்ற மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளன. இதோடு இல்லாமல் தமிழ்நாட்டில் மின்சாரம் தொடர்பான புகார்களை இனி வாட்ஸ் அப்பில் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காலத்தை முன்னிட்டு முதல் கட்டமாக இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், சென்னை வடக்கு பகுதியில் வசிப்பவர்கள் 94440 99255 வாட்ஸ் அப் எண்ணிலும், மத்திய சென்னை பகுதியில் வசிப்பவர்கள் 94458 50739 வாட்ஸ் அப் எண்ணிலும், சென்னை மேற்கு பகுதியில் வசிப்பவர்கள் 94983 78194 வாட்ஸ் அப் எண்ணிலும், சென்னை தெற்கு பகுதியில் வசிப்பவர்கள் 91500 56672 வாட்ஸ் அப் எண்ணிலும், செங்கல்பட்டு பகுதியில் வசிப்பவர்கள் 91500 56675 வாட்ஸ் அப் எண்ணிலும், காஞ்சிபுரம் பகுதியில் வசிப்பவர்கள் 91500 56674 ஆகிய வாட்ஸ் அப் எண்ணிலும் புகார் அளிக்கலாம்.