fbpx

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி!. இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

Hockey: நேற்று நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆறாவது முறையாக இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது .

சீனாவின் ஹுலுன்பியுரில் 8வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடக்கிறது. 6 அணிகள் பங்கேற்கின்றன. உலகத் தரவரிசையில் 5வது இடத்திலுள்ள ‘நடப்பு சாம்பியன்’ இந்திய அணி லீக் சுற்றில் அசத்தியது. சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா, பாகிஸ்தானை வீழ்த்தியது. தொடர்ந்து 5 வெற்றிகளுடன் 15 புள்ளி எடுத்து, அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அரையிறுதியில் நேற்று இந்திய அணி, தென் கொரியாவை எதிர்கொண்டது. பந்து இந்திய வீரர்களின் கட்டுப்பாட்டுக்குள் தான் இருந்தது.

13 வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் ராஜ்குமார் அடித்த பந்தை பெற்ற உத்தம் சிங், அதே வேகத்தில் கோலாக மாற்றினார். 19 வது நிமிடத்தில் இந்தியாவுக்கு ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பு கிடைத்தது. இதில் கோல் அடித்தார் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங். முதல் பாதியில் இந்திய அணி 2-0 என முந்தியது. இரண்டாவது பாதி துவங்கிய 2வது நிமிடத்தில் இந்திய வீரர் சுமித், பந்தை காற்றில் துக்கி அடித்தார். நீண்ட துாரத்தில் இருந்து வந்த பந்தை பெற்ற ஜர்மன்பிரீத் சிங் (32வது), அதே வேகத்தில் அடித்து, கோலாக மாற்றினார். அடுத்த நிமிடம் தென் கொரிய வீரர் ஜிஹுன் (33வது) ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில் கோல் அடித்தார். 45வது நிமிடம் மீண்டும் மிரட்டியது இந்தியா. இம்முறை கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், மீண்டும் கோல் அடித்தார். இத்தொடரில் இவர் அடித்த 7வது கோல் இது. முடிவில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. தென் கொரியா வெளியேறியது.

நேற்று நடந்த மற்றொரு அரையிறுதியில் புள்ளிப்பட்டியலில் 2, 3வது இடம் பெற்ற ‘நம்பர்-16’ இடத்திலுள்ள பாகிஸ்தான் (8), ‘நம்பர்-23’ ஆக உள்ள சீனா (6) அணிகள் மோதின. லீக் சுற்றில் சீன அணி 1-5 என பாகிஸ்தானிடம் தோற்றிருந்தது. தவிர, உலகத் தரவரிசையில் பின்தங்கிய போதும், சொந்தமண் என்பதால் அரையிறுதியில், நம்பிக்கையுடன் செயல்பட்டது. போட்டி துவங்கிய 18 வது நிமிடத்தில் சீனாவுக்கு ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பு கிடைத்தது. இதை லு யுவாலின் கோலாக மாற்றினார். இரண்டாவது பாதியில், போட்டியின் 37 வது நிமிடத்தில் பாகிஸ்தான் வீரர் நதீம் அகமது ஒரு பீல்டு கோல் அடித்தார். ஆட்ட முடிவில் இப்போட்டி 1-1 என ஆட்டம் சமன் ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய ‘பெனால்டி ஷூட் அவுட்’ நடந்தது.

இரு அணிக்கும் தலா 5 வாய்ப்பு தரப்பட்டன. முதல் இரு வாய்ப்பில் சீன அணிக்கு சென், லின் கோல் அடித்தனர். அடுத்த இரு வாய்ப்பை யுவாலின், வென்குய் வீணடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் அர்ஷத், நதீம், அஜாஸ் என முதல் மூன்று வீரர்களும் கோல் அடிக்காமல் ஏமாற்றினர். பின் நான்காவது வாய்ப்பையும் ரஹ்மான் வீணாக்கினார். இதையடுத்து பாகிஸ்தான் 0-2 என்ற கணக்கில் தோற்று வெளியேறியது. சீனா பைனலுக்கு முன்னேறியது. ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடர் பைனலுக்கு இந்தியா 6வது முறையாக முன்னேறியது. இதில் 2011, 2016, 2018, 2023 என நான்கு முறை கோப்பை வென்றது. ஒருமுறை (2012) 2வது இடம் பிடித்தது. இன்று வென்றால், 5வது கோப்பை கைப்பற்றலாம். ஆசிய சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இன்று, இந்தியா, சீனா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Readmore: இன்று புரட்டாசி பௌர்ணமி..!! வீட்டில் வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

English Summary

India Reaches Final of Asian Champions Trophy Hockey

Kokila

Next Post

மாநாடு தேதியை விஜய் கன்பார்ம் பண்ணிட்டாராமே..!! பரபரக்கும் அரசியல் களம்..!! வெளியாகும் அறிவிப்பு..!!

Tue Sep 17 , 2024
There has been a stir due to the wall advertisements that the Tamil Nadu Victory Association's conference will be held on October 15.

You May Like