fbpx

ரெடியா…? 10-வகுப்பு மாணவர்களுக்கு வரும் 26-ம் முதல்…! தேர்வுத்துறை அறிவிப்பு….!

10-வகுப்பு பொதுத்தேர்வினை தனித்தேர்வர்களாக எழுத விரும்புபவர்கள் அறிவியல் செய்முறைத் தேர்விற்கு 26-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்வினை எழுத விரும்பி, அறிவியல் செய்முறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள், வரும் 26-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் மாவட்ட கல்வி அலுவலகங்களில் பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும் இதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் அறிவியல் செய்முறைப் பயிற்சி வகுப்பிலும் கலந்துகொள்ள வேண்டும். அறிவியல் பாட செய்முறைப் பயிற்சிக்கு விண்ணப்பித்தப் பின்னர், அதற்கான அத்தாட்சி சீட்டைப் பெற்று மாவட்டக்கல்வி அலுவலகங்களில் அமைந்துள்ள அரசுத் தேர்வு மையத்தில் சமர்ப்பித்து விட்டு, ஏப்ரல் 2023 பொதுத்தேர்விற்கு டிசம்பர் 26-ம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

மூளைக்கு பலன் தரும் மூளை வடிவில் இருக்கும் பருப்பு வகை..!

Fri Dec 23 , 2022
பருப்பு வகைகளில் சிலவற்றை எடுத்து கொண்டால் நல்ல பலன் பெறலாம். அவ்வாறு இன்று பருப்புகளில் சிறந்தது வால்நட் பற்றி இங்கே அறிவோம். இவற்றில் பைட்டோ கெமிக்கல்கள், அதிக அளவு புரதங்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற சத்தான நார்ச்சத்துகள் உள்ளதால் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களை தருகிறது. வால்நட் பருப்புகள் இருதய நோய் அபாயத்தினை குறைக்கிறது. மேலும் உடல் எடை குறைக்க உதவுகிறது. இந்த பருப்புகள் பார்ப்பதற்கு மூளையைப் போலவே இருப்பது பலரும் […]

You May Like