பங்களாதேஷ்: டாக்காவில் உள்ள ஏழு மாடி வர்த்தக கட்டிடத்தில் நேற்று நடந்த வெடி விபத்தில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை 4:45 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றது.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஏழு உடல்கள் மீட்கப்பட்டன,” என்று போலீசார் தெரிவித்தனர். குறைந்தபட்சம் 100 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், பலர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்று போலீசார் கூறினார்.
காயமடைந்தவர்கள் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக டிஎம்சிஎச் போலீஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.