fbpx

”இனியாவது கவனமா செயல்படுங்க”..!! மெரினா சம்பவம் தொடர்பாக விஜய் பரபரப்பு பதிவு..!!

மெரினாவில் நடைபெற்ற விமான சாகசத்தை காண வந்தவர்களில் சிலர் பலியானதற்கு விஜய் தனது வேதனையைத் தெரிவித்துள்ளார்.

மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்வெளி சாகச நிகழ்ச்சியை நேரில் காண 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் குவிந்த நிலையில், 5 பேர் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டவர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நடிகரும், தவெக தலைவருமான விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், ”சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது.

அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று பொதுமக்கள் கூறிய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.

இப்படி மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று விஜய் கூறியுள்ளார்.

Read More : தூங்கிக் கொண்டிருந்த நண்பன்..!! தலையில் ஒரே போடு..!! துடிதுடித்து பலி..!! காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்..!!

English Summary

Vijay expressed his pain that some of the people who had come to see the flying adventure at the Marina had lost their lives.

Chella

Next Post

இரண்டு விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு..!! யார் அவர்கள்? கண்டுபிடிப்புகள் என்ன?

Mon Oct 7 , 2024
Two scientists shortlisted for Nobel Prize in Medicine..!! Who are they? What were their findings?

You May Like