பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி தோவாளை மலர்சந்தையில் பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்குவதற்காக தற்போது பொதுமக்கள் முன்வந்துள்ளனர். அதில், பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தோவாளை மலர்சந்தையில் ஒரு கிலோ ரூ.1,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மல்லிகை, தற்போது ரூ.2,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திண்டுக்கல் மலர்சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.4,000-க்கு விற்பனையாகிறது. ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லைப்பூ ரூ.2,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.400-க்கு விற்பனையான ஜாதிப்பூ, தற்போது கிலோ ரூ.1,500-க்கு விற்பனையாகிறது. அதேபோல் புதுக்கோட்டை மலர்சந்தையில் கிலோ ரூ.2,500-க்கு விற்கப்பட்ட மல்லி கை, தற்போது ரூ.4,000-க்கு விற்பனையாகிறது. ரூ.2,000க்கு விற்கப்பட்டு வந்த முல்லைப்பூ ரூ.3,000-க்கும், ரூ.1,200-க்கு விற்கப்பட்டு வந்த ஜாதிப்பூ ரூ.3,000-க்கும் விற்பனையாகிறது.