fbpx

பக்தர்கள் கவனத்திற்கு!! திருப்பதி வைகுண்ட ஏகதேச சிறப்பு தரிசனம் டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியீடு..

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி 2ம் தேதி வைகுண்ட ஏகாதசியொட்டி வைகுண்ட நுழைவு வாயில் திறக்கப்பட்டு 11ம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். சொர்க்கவாசல் திறந்திருக்கும் நாட்களில் ஏழுமலையானை வழிபடுவதற்காக வரும் பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2000 பேர் என்ற எண்ணிக்கையில் இன்று சிறப்பு ஏற்பாட்டின் பேரில் 300 டிக்கெட்டுகளை தேவஸ்தான நிர்வாகம் விற்பனை செய்ய உள்ளது.

இந்த தரிசனத்திற்காக ஸ்ரீவாரி அறக்கட்டளைக்கு ஒரு பக்தர் 10ஆயிரம் ரூபாய் நன்கொடையாக அளித்து 300 தரிசன டிக்கெட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு ஜெய விஜய துவார பாலகர்கள் சிலை வரை மட்டும் அனுமதிக்கப்பட்டு மகா லகு தரிசனம் செய்து வைக்கப்படும்.

ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் தலா 10,000 ரூபாய் நன்கொடையும் டிக்கெட் கட்டணமாக தலா 300 ரூபாயும் செலுத்தி பக்தர்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்த தரிசனத்திற்கான் டிக்கெட் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது, tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளாலாம்.

Kathir

Next Post

சூப்பரோ சூப்பர்..!! தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட்..!! அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!

Thu Dec 22 , 2022
ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் வழங்கும் நடைமுறையை பிறமாநில அரசுகள் நடைமுறைப்படுத்தினால், அதை பொறுத்து தமிழ்நாட்டிலும் செயல்படுத்தப்படும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை எழும்பூரில் நடைபெற்றது. அச்சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த 2016 முதல் 2021 வரையிலான […]

You May Like