fbpx

தமிழகமே…! கட்டாய கல்விக்கு விண்ணப்பித்த பெற்றோர்கள் கவனத்திற்கு…!

கட்டாயக் கல்வி திட்டம் 25% ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்த பெற்றோர்கள் தங்கள் பதிவு செய்த பள்ளிகளில் இன்று நடைபெறும் குலுக்கலில் கலந்து கொள்ளலாம்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்கள் இலவசமாக பயில 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அவ்வாறு மாநிலம் முழுவதும் 7,283 தனியாா் பள்ளிகளில் சுமாா் 85,000 இலவச ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இந்தத் திட்டத்தில் எல்.கே.ஜி. அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவா்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம்.

வரும் கல்வியாண்டுக்கான (2023-24) இலவச மாணவர் சேர்க்கை இணையவழி விண்ணப்பப்பதிவு கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கி கடந்த 20-ம் தேதி நிறைவடைந்தது. இந்த ஆண்டு 1.30 லட்சம் பெற்றோர் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர். பள்ளியில் நிர்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால் இன்று குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவா்களின் பெயர் உள்ளிட்ட விவரம் நாளை இணையதளத்தில் வெளியிடப்படும். சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் தகவல் அனுப்பப்படும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை rte.tnschools.gov.in என்ற இணையதளத்தையோ அல்லது 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Vignesh

Next Post

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு - ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி?

Tue May 28 , 2024
டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டில் அரசுப் பணியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் இந்த குரூப் 4 தேர்வை எழுதுவார்கள். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான குரூப் 4 பிரிவில் 6244 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது. இந்தத் தேர்வு மூலம் விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.குரூப் […]

You May Like