fbpx

ஆஸி. நாடாளுமன்றத்தில் ஒலித்த இந்தியாவின் பெருமை!. ரோஹித் சர்மா அதிரடி பேச்சு!

Rohit sharma: இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான வலுவான உறவுகளைப் பாராட்டிய ரோஹித் ஷர்மா , நடந்துகொண்டிருக்கும் சுற்றுப்பயணத்தில் தொடரை வெல்லும் உத்வேகத்தை மேம்படுத்துவதாக உறுதியளித்தார்.

இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பார்டர்-கவாஸ்கர் டிராபி 2024 இல் முதல் போட்டியில் விளையாட முடியவில்லை, இதையடுத்து, தற்போது, அவர் இந்திய அணியில் இணைந்துள்ளார். அதன்படி, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பேசிய இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார்.

https://twitter.com/Shubhamsingh038/status/1862117827207106630?

“இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் விளையாட்டாக இருந்தாலும் சரி, வர்த்தக உறவுகளாக இருந்தாலும் சரி, நாங்கள் வெகுதூரம் பின்னோக்கிச் செல்கிறோம். பல ஆண்டுகளாக, உலகின் இந்தப் பகுதிக்கு வந்து, கிரிக்கெட் விளையாடி, நாட்டின் பல்வேறு கலாச்சாரங்களை அனுபவித்து மகிழ்ந்தோம். மேலும் உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவது பெருமையாக உள்ளது என்றார்.

“நாங்கள் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளோம். இந்த வேகத்தை தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறோம், ஆனால் அதே நேரத்தில் இங்குள்ள சூழ்நிலையை அனுபவிக்க விரும்புகிறோம். எங்களால் முடியும் என்று நம்புகிறேன். பல்வேறு நகரங்கள் எங்களுக்கு வித்தியாசமான உணர்வைத் தருகின்றன. இந்திய மற்றும் ஆஸ்திரேலிய ரசிகர்களை முழுமையாக மகிழ்விப்பதற்காக, அடுத்த சில வாரங்களில் இங்கு வருவது பெருமையாக உள்ளது என்று கூறினார்.

இந்தியா மற்றும் பிரைம் மினிஸ்டர்ஸ் லெவன் அணிகள் இடையிலான பயிற்சி ஆட்டம் நவம்பர் 30 முதல் டிசம்பர் 1 வரை நடைபெற உள்ளது. இதற்காக, ஆஸி. பயணம் மேற்கொண்ட இந்திய வீரர்களை, பெர்த்தில் உள்ள கான்பெரா ஹோட்டல் ஒன்றில் அந்நாட்டு பிரதமர் ஆண்டனி அல்பனீஸை சந்தித்து பேசினார். அப்போது, இந்திய அணியை அன்புடன் வரவேற்ற ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ், தொடரின் முதல் டெஸ்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா மற்றும் விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்களை பாராட்டினார். இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வரும் டிசம்பர் 6-ம் தேதி தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது.

Readmore: நோட்!. நாளையுடன் முடிவடையும் காலக்கெடு!. டிச.1 முதல் முக்கிய மாற்றங்கள் இதோ!.

English Summary

‘We go back a long way’: Rohit Sharma lauds India-Australia cricket bond in Australian Parliament (WATCH)

Kokila

Next Post

வன்முறையை தூண்டும் சீமானின் பேச்சு..!! வழக்கை விரைந்த விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு..!!

Fri Nov 29 , 2024
The petition was dismissed, ordering that the trial court "expeditiously investigate and conclude the pending case against the petitioner."

You May Like