fbpx

பெண்ணை பலாத்காரம் செய்த நபரின் வீட்டை தரைமட்டமாக்கிய அதிகாரிகள்..!! குவியும் பாராட்டு..!!

குணா மாவட்டத்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபரின் வீட்டை அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர்.

மத்தியப்பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் அயன் கான் என்ற இளைஞருடன் 23 வயது பெண் ஒருவர் பழகி வந்துள்ளார். இந்நிலையில், 10 நாட்களுக்கு முன்பு அந்தப் பெண்ணை தனது வீட்டில் அடைத்து வைத்து அயன் கான் பலாத்காரம் செய்திருக்கிறார். மேலும், அவரை பெல்ட்டால் அடித்து துன்புறுத்தியதோடு, பெண்ணின் கண்ணில் பசையை தடவி அட்டூழியம் செய்துள்ளார். இது தொடர்பாக அந்த பெண், கடந்த வாரம் காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்நிலையில், அதற்கு மறுநாளே அயன் கானை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரது இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த 60 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே, அயன் கான் வீடு, சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டிருந்ததை கண்டறிந்த அதிகாரிகள், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கு நோட்டீஸ் வழங்கினர். அதைத் தொடர்ந்து மேல் நடவடிக்கையாக நேற்று அதிகாரிகள் அவரது வீட்டை இடித்து தரைமட்டமாக்கினர்.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குணாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தரப்பட்டது. பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக குவாலியர் அனுப்பி வைக்கப்பட்டார். பலாத்கார குற்றவாளியின் வீட்டை இடித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்ட சம்பவத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Read More : உலக தலைவர்களை குழந்தையாக பார்த்துருக்கீங்களா..? அசத்திய AI..!! பிரதமர் மோடி முதல் புதின் வரை..!!

Chella

Next Post

கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பா..? பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!

Mon Apr 22 , 2024
கோடை விடுமுறையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 10ஆம் வகுப்பு, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் பிற வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு நடைபெற்று முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கமாகி உள்ளது. கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். இந்நிலையில், விடுமுறை காலங்களில் […]

You May Like