fbpx

தன்னாட்சி கல்லூரி அங்கீகாரம்… 70% மாணவர்‌ சேர்க்கை கட்டாயம் இருக்க வேண்டும்…! புதிய விதிமுறை…

தன்னாட்சி கல்லூரி அங்கீகாரம் பெறுவதற்கான புதிய வழிமுறைகளை கழகம் வெளியிட்டுள்ளது.

தன்னாட்சியை பெற கல்லூரிகள்‌ தொடர்ந்து 10 ஆண்டுகள்‌ செயல்பட்டு இருக்க வேண்டும்‌. முந்தைய 5 ஆண்டுகளில்‌, முதலாம் ஆண்டு இளங்கலை படிப்பில்‌ 60 சதவீத மாணவர்‌ சேர்க்கை இருக்க வேண்டும்‌ என்ற விதிமாற்றப்பட்டு, தற்பொழுது 70 சதவீத மாணவர்‌ சேர்க்கை இருப்பது கட்டாயம். கல்வி நிறுவனத்தின்‌ h-index குறியீடு 10-ல்‌ இருந்து 20ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

முந்தைய 3 ஆண்டு தேர்ச்சி விகிதம்‌ 5 ஆண்டாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி 5 ஆண்டு தேர்ச்சி சதவீதம்‌ 70 சதவீதத்திற்கும்‌ மேலாக இருக்க வேண்டும்‌. விரிவுரையாளர்களின்‌ சராசரிபணி அனுபவம்‌ 5 ஆண்டுகளாக இருக்க வேண்டும்‌. மேலும்‌ அனைத்து துறைகளிலும்‌ ஆசிரியர்‌ – மாணவர்கள்‌ விகித அளவு என்பது 1:20 ஆக இருக்க வேண்டும்‌. 75 சதவீத இளங்கலை படிப்புகளில்‌ ஒரு பேராசிரியர்‌, இரண்டு இணை பேராசிரியர்கள்‌, 6 துணை பேராசிரியர்கள்‌ என இருக்க வேண்டும்‌.

ஒவ்வொரு தன்னாட்சி கல்லூரிகளிலும்‌ நிர்வாக குழு, நிதி குழு,அகடமிக்‌ குழு அமைக்கப்பட்டு முறையாககூட்டப்பட வேண்டும்‌. புதிய துறைகள்‌ தொடங்கப்பட வேண்டும்‌ என்றால் பல்கலைக்கழகத்தின்‌ அனுமதி பெற. வேண்டும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பரபரப்பான சூழலில் தமிழக அரசியல்...!செந்தில் பாலாஜி வழக்கு... 3 வது நீதிபதி முன்பு இன்று விசாரணை...!

Thu Jul 6 , 2023
செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி, அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கு 3 வது நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வர உள்ளது. கடந்த மாதம் 14-ம் தேதி, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்ட உடனே நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, […]

You May Like