வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடி வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம், சென்னை உயர்நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை எனும் தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.. லஞ்ச ஒழிப்புத்துறை பதில் தாக்கல் செய்த பின்பு அதுகுறித்து பார்க்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனால், இந்த வழக்கில் பொன்முடிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.