வருடம் தோறும், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச சீருடை தமிழக அரசால், வழங்கப்பட்டு வருகிறது. அப்படி வழங்கப்பட்டு வரும், இலவச சீருடை, ஏழை, எளிய மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், படித்து வரும் மாணவர்களுக்கு வருடம் தோறும், அத்தியாவசிய தேவையாக இருக்கும் பொருட்களான நோட்டுப் புத்தகங்கள், காலனி மற்றும் புத்தகப் பை, சீருடை, மடிக்கணினி, மிதிவண்டி போன்ற அனைத்து வகையான பொருட்களும் பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக, இலவசமாக, மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், சென்ற கல்வி ஆண்டில் மாணவர்கள் பள்ளிகளில் வந்து சேர பல மாதங்கள் ஆகிவிட்டது.
எனவே தற்போதைய கல்வி ஆண்டில், மிக விரைவாக இந்த பொருட்கள் வழங்கப்பட்டாலும், பற்றாக்குறை காணப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. ஆகவே பாதி மாணவர்களுக்கு இன்னும் இந்த பொருட்கள் வழங்கப்படவில்லை. என்ற தகவலும் கிடைத்துள்ளது.
அத்தோடு, ஒரு சில மாணவர்களுக்கு ஒரு சீருடை மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாகவும், குழந்தைகளுக்கு நாள்தோறும், தேவைப்படும் புத்தகம் மற்றும் காலணிகள் இல்லாததால், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களிடம் இதை வாங்கி தருமாறு, தொடர்ந்து, கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக, உரையாற்றிய கல்வித்துறை அதிகாரிகள் பொருட்கள் தரம் குறைவாக இருப்பதால், உற்பத்தியாளர்களிடம் திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறது. அதன் காரணமாகத்தான், காலதாமதம் ஏற்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார்கள்.