fbpx

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்..? சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு..!!

ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக பணப்பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து பலமுறை ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் அமலாக்கத்துறை சார்பில் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், செந்தில் பாலாஜிக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை.

இதற்கிடையே, இலாகா இல்லாத அமைச்சராக பதவி வகித்து வந்த செந்தில் பாலாஜி திடீரென தனது பதவியையும் ராஜினாமா செய்தார். இந்நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஜாமீன் மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில் “செல்வாக்கு மிக்கவராக செந்தில் பாலாஜி விளங்கி வருவதால், ஜாமீன் கிடைத்தால் அவர் சாட்சிகளை அச்சுறுத்தக் கூடும்” என தெரிவிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும், ஆவணங்களை திருத்தியதாக செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டு தவறு” எனவும் அமலாக்கத்துறை தெரிவித்தது. மேலும் ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லாததால், சந்தர்ப்ப சூழ்நிலை மாறி உள்ளது. வெளிநாட்டுக்கு தப்பிவிடுவார் என்று சந்தேகப்பட்டால் யாருக்கும் ஜாமீன் வழங்க முடியாது. செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளன” எனவும் குற்றம் சாட்டினார். அப்போது அமலாக்கத்துறை சார்பில், “செந்தில் பாலாஜிக்கு எதிரான பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை துவங்க விடாமல் செந்தில் பாலாஜிதான் தாமதப்படுத்தி வருகிறார். விரைவில் விசாரணையை துவங்க உள்ளது” என்று தெரிவித்தார். செந்தில் பாலாஜி தரப்பு வாதம் நிறைவடைந்ததை அடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நாளை வழக்குவதாக கூறி நீதிபதி கூறினார்.

Chella

Next Post

"திமுக பெயரை கேட்டாலே அலறும் அமித் ஷா, மோடி.."! - உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலினின் மடல்.!

Wed Feb 14 , 2024
வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 16 17 18 தேதிகளில் நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக சார்பாக பொதுக் கூட்டங்கள் நடைபெற இருக்கிறது. இந்த பொதுக்கூட்டங்களில் திரளாக உடன்பிறப்புகள் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்து திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு மடல் ஒன்றை எழுதி இருக்கிறார் மு.க ஸ்டாலின். அந்த மடலில் நாடாளுமன்ற தேர்தல் பணிகளுக்காக கழகத் தொண்டர்கள் தயாராவது குறித்தும் பாசிச பாரதிய ஜனதா அரசை ஆட்சியில் […]

You May Like