fbpx

சீனாவுடன் தொடர்புடைய 232 செயலிகளுக்கு தடை….மத்திய அரசு அதிரடி!

சீனாவுடன் தொடர்புடைய சூதாட்ட செயலிகள் உட்பட 232 செயலிகளுக்கு மத்திய அரசு தடை வித்தித்து உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69A பிரிவின் கீழ், “இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, மாநிலம் மற்றும் பொது ஒழுங்கின் பாதுகாப்பு” ஆகியவற்றுக்கு பாதகமான செயலிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில் ஏற்கனவே TikTok மற்றும் PUBG போன்ற செயலிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. சூதாட்டம் மற்றும் கடன் வழங்கும் இந்த செயலிகள், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் துன்புறுத்தல் ஆகியவற்றை சீனாவின் ஆதரவுடன் செய்வதாக குற்றசாட்டு எழுந்தது.

மேலும் இந்த செயலிகளை பயன்படுத்தி அதனால் ஏற்பட்ட நஷ்டத்தால் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பலர் தற்கொலை செய்துகொண்டனர். மேலும், இந்த செயலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெலுங்கானா, ஒடிசா மற்றும் உத்தரபிரதேச மாநில அரசுகள் மற்றும் மத்திய உளவு அமைப்புகளும் மத்திய அரசை வலியுறுத்தி வந்தன. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், இந்தநிலையில், சீன இணைப்புகளுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் வழங்கும் செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், சீன செயலிகளை இனி ஸ்மார்ட்ஃபோன்களில் பதிவிறக்கம் செய்ய முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Kokila

Next Post

ரொம்ப டயர்டா இருக்கா? பனங்கற்கண்டு பால் குடிச்சா போதும்! புத்துணர்ச்சி ஆகிடலாம்!

Mon Feb 6 , 2023
பனங்கற்கண்டு பால் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? இந்த பன்னக்கற்கண்டை பாலில் கலந்து தினமும் இரவில் குடித்துவர மூளையின் செயல் திறனை அதிகரித்து ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. இழந்த சக்தியை மீட்டு தருகிறது, நாட்பட்ட நெஞ்சுச்சளியை போக்குகிறது, நல்ல உறக்கம் கிடைக்கும், செரிமான கோளாறு குணமடையும். நுரையீரல் சுத்தமடையும். தேவையான பொருட்கள்: பால் – 1 /2  லிட்டர், பனங்கற்கண்டு – 1 கப், கருப்பு மிளகு – 1 டீ […]

You May Like