இயக்குநர் மாரி செல்வராஜுக்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நெருக்கம் அதிகம் என்பார்கள். அப்படி இருக்கையில், மாரி செல்வராஜின் சொந்த கிராமமான புளியங்குளத்தைச் சேர்ந்த 300 பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.
2026 சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு தனது அரசியல் பயணத்தை ஆடி வரும் விஜய், மாநிலம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக மாரி செல்வராஜின் சொந்த கிராமமான ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளத்தைச் சேர்ந்த சுமார் 300 பேர் தவெகவில் இணைந்தனர்.
இதில் திமுக, அதிமுக, விசிக, நாதக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர். ‘வாழை’ படத்தில் சிவணைந்தன் கதாப்பாத்திரத்தில் நடித்த பொன்வேல் என்ற சிறுவனின் பெற்றோரும் தவெகவில் இணைந்தனர். பொன்வேலும் இதில் கலந்து கொண்டார். அவருக்கும் தவெக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் கட்சி சால்வை அணிவித்தார்.
இது குறித்து தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் கூறுகையில், “2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி இந்த பயணத்தை தொடர்ந்துள்ளோம். புளியங்குளம் கிராமத்திற்கு தேவையான அனைத்தையும் நிறைவேற்றி தருவோம். 2026இல் தலைவர் விஜய்யை அரியணையில் அமர வைப்போம். அதற்காக தான் தற்போது வாழை படத்தின் கதாநாயகன் தவெகவில் இணைந்திருக்கிறார்” என்றார்.
Read More : மாதம் ரூ.2,40,000 வரை சம்பளம்..!! விண்ணப்பிக்க டிச.2ஆம் தேதி தான் கடைசி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!