தங்களது பணத்தை பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்ய பலரும் விரும்புகின்றனர். அந்தவகையில், பலரின் தேர்வாக இருப்பது ஃபிக்சட் டெபாசிட் எனப்படும் FD திட்டங்கள் தான். FD முதலீட்டிற்கு கொடுக்கப்படும் வட்டி விகிதங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் உள்ளன. இதற்கிடையே, சமீப வாரங்களாக பல வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை குறைக்க துவங்கியுள்ளன.
இருப்பினும், பல ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்குகள் இன்னும் சில குறிப்பிட்ட FD திட்டங்களுக்கு, குறிப்பாக மூத்த குடிமக்களுக்கான FD-க்களுக்கு 9.5%-க்கும் அதிகமான வட்டி விகிதத்தை வழங்குகின்றன. பிறருக்கு வழங்கப்படுவதை விட சீனியர் சிட்டிசன்களுக்கு வங்கிகள் FD-க்களுக்கு சற்று அதிக வட்டி விகிதத்தை வழங்குகின்றன. இந்த கூடுதல் வட்டி விகிதமானது 0.25 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை மாறுபடும். அதேபோல் இந்த கூடுதல் வட்டி விகிதமானது வழக்கமான FD திட்டங்களுக்கு பொருந்தக்கூடிய சாதாரண வட்டியை விட அதிகமாக இருக்கும்.
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் :
மூத்த குடிமக்களுக்கான FD திட்டங்களில், Jana Small Finance Bank 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதிர்வு காலம் உள்ள திட்டங்களுக்கு 3.50% முதல் 9% வரை வட்டி வழங்குகிறது. 2 வருடங்களுக்கு மேல் மற்றும் 3 வருடங்கள் வரை முதிர்வு காலம் கொண்ட FD-க்களுக்கான வட்டி விகிதம் 9% ஆகும். அதே நேரம் 1 முதல் 2 ஆண்டுகளுக்குள் மெச்சூரிட்டி அடையும் FD-க்களுக்கு இந்த வங்கி 8.75% வட்டியை வழங்குகிறது.
சூர்யோதை ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் :
Suryoday Small Finance வங்கியானது 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதிர்வு காலம் கொண்ட FD-க்களுக்கு 4.50% முதல் 9.10% வரை வட்டி வழங்குகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 3 வருடங்களுக்குள் மெச்சூரிட்டி அடையும் FD-க்களுக்கு அதிகபட்ச வட்டியாக 9.10% வழங்கப்படுகிறது. இந்த வங்கி 15 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை முதிர்வு காலம் கொண்ட FD-க்களுக்கு 9% வட்டி வழங்குகிறது.
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் :
Unity Small Finance வங்கியானது 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதிர்வு காலம் கொண்ட FD திட்டங்களுக்கு 4.50% முதல் 9.50% வரை வட்டி வழங்குகிறது. இந்த வங்கி வழங்கும் அதிகபட்ச வட்டி விகிதமான 9.50 சதவீதத்தை 1001 நாட்களில் மெச்சூரிட்டி அடையும் FD-க்களுக்கு வழங்கப்படுகிறது. 501 நாட்களில் முதிர்வடையும் FD-க்களுக்கு 9.25% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 6 மாதங்கள் முதல் 201 நாட்களுக்குள் முதிர்வடையும் FD திட்டங்களில், மூத்த குடிமக்களுக்கு இந்த வங்கி 9.25% வட்டியை வழங்குகிறது
ESAF ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் :
7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதிர்வு காலம் கொண்ட FD-க்களுக்கு, ESAF Small Finance வங்கியானது 4.50% முதல் 9% வரையில் வட்டி வழங்குகிறது. இதில் அதிகபட்ச வட்டி விகிதமான 9 சதவீதம், 2 வருடங்களுக்கு மேல் மற்றும் 3 வருடங்களுக்குள் மெச்சூரிட்டி அடையும் FD-க்களுக்கு வழங்கப்படுகிறது.
.
ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் :
Fincare Small Finance வங்கியானது 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதிர்வு காலம் உள்ள திட்டங்களுக்கு 3.60% முதல் 9.11% வரை வட்டி வழங்குகிறது. அதிகபட்சமாக 9.11% வட்டியை 750 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட FD திட்டங்களில் சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்குகிறது.