கோடை வெயில், அக்னி நட்சத்திரம், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் என்ற வார்த்தைகளைக் கேட்டு பழகிப்போன நம்மை தற்போது வெப்ப அலை, பருவமழை மாற்றம், மஞ்சள் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் என்றெல்லாம் வானிலை ஆய்வாளர்கள் பயமுறுத்தி வருகின்றனர். அதை ஒருபக்கம் சமாளித்து வந்தாலும், தமிழகத்தின் பல இடங்களில் குடிநீர் பிரச்சனை தற்போது தலைதூக்கத் தொடங்கி விட்டது.
இதற்கிடையே, கோடை வெயிலை சமாளிக்க ஏராளமானோர் இளநீர், நுங்கு, ஜூஸ், கூழ் போன்ற பானங்களை தினந்தோறும் குடித்து வருகின்றனர். ஆனால், உடல் உபாதை உள்ளவர்களுக்கு இதனை சாப்பிட்டால் ஒதுக்காமல் போகும். பொதுவாகவே மற்ற தானியங்களை காட்டிலும் கம்பில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. கம்பு சாப்பிடுவதால் அதில் உள்ள முழு சத்துக்களும் நமக்கு கிடைக்கும். அதேபோல கம்பில் தான் அதிகளவிலான இரும்பு சத்து அதிகம் உள்ளது. ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்களுக்கு கம்பை எடுத்துக் கொள்ளலாம். இந்த கம்பானது உடல் கொழுப்பை கரைக்க உதவுகிறது.
கம்புடன் சிறிதளவு மோர் சேர்த்து குடித்தால், நமது குடலுக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகள் கம்பு சோறு, கூழ் போன்றவற்றை தினசரி சாப்பிடலாம். சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் கேப்பங்கூழ் குடிப்பதை தவிர்த்துக் கொள்ளலாம். மேலும், தைராய்டு மற்றும் செரிமான பிரச்சனை உள்ளவர்களும் இதனை குடிக்கக் கூடாது. சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்களும் இதனை குடிக்கக் கூடாது. மேற்கொண்டு வயிறு மற்றும் இவ்வாறன பிரச்சனை உள்ளவர்கள் வாரத்தில் ஒரு முறை குடிக்கலாம்.
Read More : இதில் முதலீடு செய்தால் பெரியளவில் வருமானம் பார்க்கலாம்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!