fbpx

”பாதுகாப்பாக இருங்கள்”..!! இன்று மிக மிக கனமழை பெய்யும்..!! ரெட் அலெர்ட் விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்..!!

உத்தரகாண்டில் பெய்த கனமழை காரணமாக, டேராடூனின் மால்தேவ்தாவில் உள்ள டூன் பாதுகாப்பு கல்லூரியின் கட்டிடம் இன்று (ஆகஸ்ட் 14) இடிந்து விழுந்தது. கடந்த 24 மணி நேரமாக பெய்த தொடர் மழையால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. டேராடூன் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்டில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 60 பேர் பாலியாகியுள்ளன. குறைந்தது 17 பேரைக் காணவில்லை என கூறப்படுகிறது. சுமார் 1,169 வீடுகள் சேதமடைந்துள்ளன. நிலச்சரிவுகளால் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக டேராடூன் மற்றும் சம்பவாத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் இன்று (ஆகஸ்ட் 14) மிக மிக கனமழை பெய்யும் என்று சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

Chella

Next Post

இன்ஸ்டாகிராமில் கள்ளக்காதலா…..! சந்தேகத்தால் குழந்தைகளின் கண் முன்னே, மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்….!

Mon Aug 14 , 2023
மனைவி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை, தான் பின் தொடர விடாமல், பிளாக் செய்து வைத்திருந்ததால், ஆத்திரம் கொண்ட கணவன், பெற்ற குழந்தைகள் கண்முன்னே, தாயின் கழுத்தை நெறித்து, கொடூரமாக, கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உத்திரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த ஒரு பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, வந்தனர். மேலும், அந்தப் பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கம் பூட்டப்பட்டு, தனிப்பட்டதாக இருக்கிறது. அதனை, […]

You May Like