ஒரு பெண் இல்லத்தரசி என்ற காரணத்திற்காக வாகன விபத்துகளில் ஏற்படும் காயங்களுக்கு இழப்பீடு வழங்க மறுக்கக் கூடாது என கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் பாலக்கோட்டை சேர்ந்த பெண் ஒருவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. 2006-ம் ஆண்டு கேரள மாநில போக்குவரத்து கழக (கேஎஸ்ஆர்டிசி) பேருந்து விபத்துக்குள்ளானதில் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டதாகவும், ஆனால் தனக்கு இழப்பீடு வழங்க மறுப்பதாகவும் கூறியிருந்தார்.. இந்த மனு நீதிபதி தேவன் ராமச்சந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது..
அப்போது, மோட்டார் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயம், அப்பெண் ஒரு இல்லத்தரசி என்பதால் அவருக்கு அதிக இழப்பீடு வழங்கத் தேவையில்லை என்று கூறியிருந்தது.. இந்த வாதத்தை நிராகரித்த உயர்நீதிமன்றம், இது ‘அபத்தமானது’ என்று கூறியதுடன், பணிபுரியும் பெண்களுக்கு வழங்குவது போல் இல்லத்தரசிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று கூறியது. மேலும் சுமார் ரூ.1.65 லட்சம் அபராதம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது..
மேலும் “ வீட்டில் ஒரு தாய் மற்றும் மனைவியின் பங்கு ஒப்பிடமுடியாதது. அவர் ஒரு உண்மையான தேசத்தைக் கட்டியெழுப்புபவர். அவர் தனது நேரத்தை குடும்பத்திற்காக முதலீடு செய்கிறார் மற்றும் அடுத்த தலைமுறையின் சிறந்த நிலைகளை வளர்ப்பதை உறுதிசெய்கிறார். அவரது முயற்சிகளை ஒருபோதும் அற்பமாக எடுத்துக்கொள்ள முடியாது. அல்லது பண மதிப்பு இல்லாதது என ஒதுக்கித் தள்ளப்பட்டது” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.