fbpx

ஆட்டுக்கால் சூப் தரும் மகத்தான மருத்துவ பலன்கள்….!

தாவரங்களில் பல மருத்துவ பயன்கள் இருக்கிறது. அதேபோல அசைவ உணவுகளிலும் பல மருத்துவ பலன்கள் இருக்கிறது. இஞ்சி, கொத்தமல்லி போன்ற மூலிகைகள் போட்டு தயார் செய்யப்படும் ஆட்டுக்கால் சூப் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது.

ஆட்டுக்கால் சூப் சாப்பிடுவதால் கொலாஜின் உற்பத்தி அதிகரித்து எலும்பை வாழ்வாக்குகிறது மிளகு சேர்த்த ஆட்டுக்கால் சூப் சாப்பிடுவதால் நெஞ்சு சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் முடிவுக்கு வரும் குளிர்காலங்களில் ஆட்டுக்கால் சூப் சாப்பிடுவதால் குளிரை போக்குவதோடு ஜலதோஷ பிரச்சனைகளை குணப்படுத்தும்.

குடலில் உண்டாகக்கூடிய எரிச்சல் மற்றும் செரிமான கோளாறுகளை ஆட்டுக்கால் சூப் குணமாக்குகிறது. அதிக அளவிலான புரதசத்து கொண்ட ஆட்டுக்கால் சூப், பசியின்மையை ஏற்படுத்துவதால் எடையை குறைக்க சிறந்ததாக இருக்கும். ஆனால் ஏற்கனவே உடல் எடை குறைவாக இருப்பவர்கள் சாப்பிடுவதற்கு முன்னால் ஆட்டுக்கால் சூப் குடிக்காமல் இருப்பது நல்லது.

ஆட்டுக்கால் சூப்பில் இருக்கின்ற பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் பற்களை ஆரோக்கியமாக்குகிறது. ஆட்டுக்கால் சூப்பில் இருக்கின்ற மூலிகைகள் உடலில் இருக்கின்ற நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. ஆட்டுக்கால் சூப்பில் இருக்கின்ற அர்ஜினைன், குளுட்டமைன் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Next Post

BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…! மாதம் ரூ.70,000 ஊதியம்…! ஆர்வம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!

Sun Jul 30 , 2023
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Web Developer, Manager, HR Executive, IT Executive மற்றும் Maintenance Supervisor பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 6 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E, B.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு […]

You May Like