பெங்களூர் (BENGALURU) நகரை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொலை செய்யப்பட்ட அந்த மூதாட்டியின் உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டு டிரம்மில் அடைக்கப்பட்ட நிலையில் கே.ஆர் புரம் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூர்(BENGALURU) நகரின் கேஆர் புரம் பகுதியில் உள்ள ஆளில்லாத வீடு ஒன்றின் அருகே கிடந்த டிரம்மில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் டிரம்மை சோதனை செய்து பார்த்தபோது அதில் பெண் ஒருவரின் வெட்டப்பட்ட உடல் பாகங்கள் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறையினர் இறந்த பெண்ணிற்கு 65 வயது இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் கொலை செய்த நபர் அந்த பெண்ணின் கை மற்றும் கால்களை வெட்டி வீசிவிட்டு மற்ற உடல் பாகங்களை டிரம்மில் அடைத்து வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கைப்பற்றப்பட்ட உடல் பாகங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பெங்களூர் நகரின் கூடுதல் காவல் துறை கமிஷனர் ராமன் குப்தா ” இந்தக் கொலை சம்பவம் சனிக்கிழமை நடைபெற்று இருக்கலாம் என தெரிவித்திருக்கிறார். கொலை செய்த நபர் அந்த பெண்ணை கொன்று அவரது உடல் பாகங்களை டிம்மில் அடைத்து ஆளில்லாத பகுதியில் வீசி சென்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இறந்த பெண் அவரது மகளுடன் கே ஆர் புரம் பகுதியில் உள்ள வாடகை குடியிருப்பில் வசித்து வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மூதாட்டி கொலை செய்யப்பட்டு டிரம்மில் அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.