fbpx

இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!! இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையம் மற்றும் உறுப்பு சமுதாயக் கல்லூரியுடன் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டிவனம் தாலுகா பேரணி கிராமத்தில் இன்று நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையம் மற்றும் உறுப்பு சமுதாயக் கல்லூரியுடன் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டிவனம் தாலுகா பேரணி கிராமத்தில் உள்ள தூய இருதய கலை அறிவியல் கல்லூரியில் இன்று (பிப்.13) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். முகாமில் 8, 10, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதியை உடையவர்களும் கலந்து கொள்ளலாம்.

விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுனர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி (04146-226417), 9499055906 என்ற எண்களிலோ தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

உங்கள் ஆதார் எண்ணுக்கு ஆபத்து..!! பாதுகாப்பா இருக்கான்னு செக் பண்ணுங்க..!! பணம் பறிபோகும் அபாயம்..!!

Tue Feb 13 , 2024
நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு ஆதார் என்பது முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. அரசு சேவைகள், வங்கி சம்பந்தப்பட்ட வேலைகள், தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் பல போன்றவற்றிற்கும் இந்த ஆதார் எண் பயன்படுகிறது. ஆதார் எண் ஒருவரது வங்கிக் கணக்கு, பான் கார்டு, மின்சார சேவை உள்ளிட்டவற்றுடன் இணைக்கப்பட்டிருப்பதால், இன்று ஆதாரை வைத்து பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகின்றன. எனவே, ஒருவர் ஆதார் நம்பரை வழங்கும்போது செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத […]

You May Like