fbpx

பெரும் அதிர்ச்சி..!! 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த காவலர்..!! புரட்டி எடுத்த மக்கள்..!!

ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் 4 வயது சிறுமியை காவலர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி காவல் நிலையத்திற்கு வெளியே பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் ஒன்றிணைந்து குற்றம் சாட்டப்பட்ட சப்-இன்ஸ்பெக்டரை அடித்து உதைத்துள்ளனர். தேர்தல் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பூபேந்திர சிங், அந்த சிறுமியை தனது அறைக்குள் இழுத்துச் சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல் துணைக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். காவல்நிலையத்தில் அருகில் வசிக்கும் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த காவலர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அத்துடன் அந்த எஸ்.ஐ. மீது ராகுவாஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் பலாத்காரம் செய்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது எனவும், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். காவல்நிலையத்தில் காவலருக்கு எதிராக நடந்த போராட்டத்தில் அவர்கள் போலீசாருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அவர்கள் பூபேந்திர சிங்கையும் அடித்து உதைத்து அவரை போலீசில் ஒப்படைத்தனர்.

Chella

Next Post

டெல்லியில் நில அதிர்வு..!! அலறியடித்து ஓடிய பொதுமக்கள்..!!

Sat Nov 11 , 2023
டெல்லியில் இன்று மாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், பணி செய்துக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் இன்று பிற்பகல் 3.36 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அடுக்குமாடி கட்டிடங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 2.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வு […]

You May Like