fbpx

நிர்வாண வீடியோவில் பிக்பாஸ் பிரபலம் அபிராமி..!! தொடரும் டீப் ஃபேக் சர்ச்சை..!!

பாலிவுட்டை தொடர்ந்து கோலிவுட் நடிகைகளையும் இந்த டீப் ஃபேக் சர்ச்சை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது. இதில் பிக்பாஸ் புகழ் நடிகை ஒருவரும் சிக்கியிருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை ராஷ்மிகா மந்தானா டீப் ஃபேக் வீடியோவில் சிக்கினார். இதனைக் கண்டு கோபமடைந்த நடிகர் அமிதாப் பச்சன் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். மகளிர் ஆணையம் இந்த விஷயத்தில் தலையிட டெல்லி காவல்துறை இந்த விஷயத்தை வழக்குப் பதிவு செய்து சமீபத்தில் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தது.

ராஷ்மிகா மட்டுமின்றி, பாலிவுட் நடிகைகள் அலியா பட், கத்ரீனா கைஃப் என முன்னணி நடிகைகள் பலரும் இந்த சிக்கலை அனுபவித்தனர். இந்த விஷயத்திற்கு திரையுலகினர் பலரும் தங்கள் எதிர்ப்பையும் பதிவு செய்தனர். இதுபோன்ற சூழ்நிலையில்தான், பிக்பாஸ் பிரபலமான நடிகை அபிராமியும் இதுபோன்ற டீப் ஃபேக் வீடியோ சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அபிராமி இதற்கு விளக்கம் கொடுத்து நீண்ட பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், “என் வாழ்க்கையில் நான் சந்தித்த மோசமான மனிதர்களுக்கு கூட இப்படி ஒரு சம்பவம் நடக்கக் கூடாது. சமீபகாலமாக இந்த டீப் ஃபேக் மிகவும் பிரபலமாகி வருகிறது. உண்மையில் இது கவலைப்பட வேண்டிய விஷயம். இதை உருவாக்கியவன் குற்றவாளி. அதை பகிர்ந்து மகிழ்ச்சி காண்பவன் அதைவிட பெரிய குற்றவாளி. நிச்சயம் அவர்களுக்குத் தண்டனை உண்டு. நான் தைரியமான பெண். தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வதை தவிர மற்ற எல்லாவிதமான கீழ்தரமான வேலைகளும் இங்கு நடக்கிறது.

பெண்களின் டீப் ஃபேக் வீடியோவை பார்ப்பதில் என்ன சந்தோஷம் கிடைக்கிறது எனத் தெரியவில்லை. இதுபோன்ற விஷயம் இனி எந்தப் பெண்களுக்கும் நடக்கக் கூடாது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப் போகிறேன்” என ஆவேசமாகக் கூறியுள்ளார்.

Chella

Next Post

’யாருமே வரல’..!! ஏமாற்றத்தில் எடப்பாடி..!! 40 தொகுதிகளிலும் களமிறங்கும் அதிமுக..!!

Tue Jan 30 , 2024
2024 நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டை பொறுத்த வரை திமுக, அதிமுக பிரதான கட்சிகளாக உள்ளன. திமுக பொறுத்தவரை சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதோ அதே கட்சிகளுடன் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இதனால், திமுக தலைமை கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். […]

You May Like