தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மாதமும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பாக வருகின்ற 11ஆம் தேதி விஐடி பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டய படிப்பு முடித்தவர்கள் வரையில் அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் பங்கேற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.
இந்த முகாம் காலை 8.30 மணி அளவில் தொடங்கி பிற்பகல் 3 மணி வரையில் நடைபெறும் இதில் பங்கேற்றுக் கொள்வதற்கு விருப்பம் உள்ளவர்கள் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று முன் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.