fbpx

மீண்டும் அதிகரிக்கும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு!… 14 ஆயிரம் பறவைகள் அழிப்பு!

ககோஷிமாவின் மினாமிசாட்சுமா நகரில் உள்ள கோழிப்பண்ணையில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தெற்கு ஜப்பானில் 14 ஆயிரம் பறவைகள் அழிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்க, பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து 3 கி.மீ முதல் 10 கி.மீ வரையுள்ள 15 பண்ணைகளில் வளர்க்கப்படும் சுமார் 3,63,000 கோழிகள் மற்ற இடங்களுக்கு கொண்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அழிக்கப்பட்ட பறவைகளை அடக்கம் செய்வதும், கோழிப்பண்ணைகளைச் சுத்தம் செய்யும் பணிகளும் அடுத்த சில நாள்களுக்குள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் பறவைக் காய்ச்சல் சீசன் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் தொடங்கும். கடந்த பருவத்தில், ஜப்பானில் 47 மாகாணங்களில் சுமார் 26 பண்ணைகளில் நோய்க்கிருமி தொற்று ஏற்பட்டு 17.71 மில்லியன் பறவைகள் அழிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல்!… இன்றுமாலை தகனம்!

Tue Feb 13 , 2024
ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனும், திரைப்பட இயக்குநருமான வெற்றி துரைசாமியின், உடலுக்கு இன்றுமாலை தகனம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக மனிதநேய அறக்கட்டளை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சியின் முன்னாள் மேயர் மற்றும் மனிதநேய கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு சைதை துரைசாமி அவர்களின் மகன் மனிதநேய அறக்கட்டளையின் இயக்குனர் வெற்றி துரைசாமி அவர்கள் […]

You May Like