fbpx

பாராளுமன்ற தேர்தல் 2024: “போட்டியிலிருந்து பின் வாங்கும் பாஜக முக்கிய தலைகள்”.. உளவுத்துறை ஷாக்கிங் ரிப்போர்ட்.!

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வருடம் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் முக்கிய போட்டியாளர்களாக கருதப்பட்ட அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் போட்டியிட மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு, வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. கடந்த முறை அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் கூட்டணி அமைத்து தமிழகத்தில் போட்டியிட்டன. இந்த வருடம் பாரதிய ஜனதா மற்றும் அதிமுக கட்சிகளிடையே ஏற்பட்ட பிளவை தொடர்ந்து அதிமுக தங்களது தலைமையில் கூட்டணியை அமைக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. மறுபுறம் பிஜேபி தலைமையில் மூன்றாவது அணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பிஜேபி தலைமையிலான கூட்டணியில் பாஜக, அமமுக, ஓபிஎஸ், தமிழ் மாநில காங்கிரஸ், தேமுதிக மற்றும் பாமக போன்ற கட்சிகள் இணையலாம் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஓபிஎஸ் மற்றும் தினகரன் கூட்டணியில் இருப்பதால் தென் மாவட்ட ஓட்டுக்களை கவரலாம் என பாரதிய ஜனதா திட்டம் தீட்டி உள்ளது. மேலும் இந்த வருட பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியாவது வென்று விட வேண்டும் என்ற இலக்குடன் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் வியூகங்களை அமைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை, கோவை தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அந்த தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை. மேலும் கட்சியின் தலைவராக பதவி வகிப்பதே மிகப்பெரிய சுமையாக இருக்கிறது என தெரிவித்த அவர் இந்தப் பணிகளுக்கே நேரம் போதாமல் இருப்பதால் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் மத்திய இணை அமைச்சர் ஆக இருக்கும் எல்.முருகன் நீலகிரி தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தற்போதும் அவர் ராஜ்யசபாவிற்கு மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் அவரும் போட்டியிட மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு முக்கிய அரசியல் பிரமுகர்கள் வர இருக்கின்ற தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கி இருப்பது குறித்து அதிர்ச்சி காரணமும் வெளியாகி இருக்கிறது. மத்திய அரசின் உளவுத்துறை அறிக்கையின் படி இருவரும் படுதோல்வி அடைவார்கள் என்று வந்ததால் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Post

விதிமுறைகளை மீறிய 17 கோடி போலி ப்ரொபைல்கள்.! தட்டி தூக்கிய கூகுள்.! புதிய டெக்னாலஜியால் அதிரடி.! 2023 ரிப்போர்ட்.!

Wed Feb 14 , 2024
கூகுள் நிறுவனம் புதிய மெஷின் லேர்னிங் அல்காரிதம் பயன்படுத்தி, 170 மில்லியனுக்கும் அதிகமான, கொள்கைகளை மீறிய மதிப்புரைகளை (ரிவ்யூ) நீக்கிவிட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் போலியான ஓவர்லே செய்யப்பட்ட தொலைபேசி எண்களையும் கண்டறிவதற்கான முயற்சியில் இறங்கிய போது, 14 மில்லியன் வீடியோக்கள் தங்கள் நிறுவனத்தின் பாலிசியை மீறியதாக கண்டுபிடிக்கப்பட்டது. அவையும் கூகுள் தேடுதலில் இருந்து நீக்கப்பட்டன. கூகுள் நிறுவனம் தனது சேவைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஒன்றாக, தற்போது போலியான விபரங்களை கூகுள் […]

You May Like