சேலம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவு திரட்டி நடிகர் போஸ் வெங்கட் பிரச்சாரம் செய்தார்.
சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து, மெட்டி ஒலி புகழ் நடிகர் போஸ் வெங்கட், சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு சென்று தேர்தல் பரப்புரை வாகனத்தில் நின்றபடி பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்தார். அப்போது, ஓமலூரை அடுத்த கருப்பூர் பகுதியில் வாக்கு சேகரித்த அவர், ”பாஜக ஒரு திருட்டு கட்சி. அங்கு திருடர்கள், ரௌடிகள் உள்ளிட்டோர்கள்தான் உள்ளனர் என்றும் திமுகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும், பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் ஏன் வாக்களிக்கக் கூடாது என பிரச்சாரம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பொய் கலந்ததுதான் அரசியல். ஆனால், பாஜக அரசியலுக்கு வந்ததும் பொய் அதிகமாகி விட்டது. பிரதமர் மோடி கடந்த தேர்தலின் போது கருப்பு பணத்தை மீட்டு அனைவருக்கும் ரூ.15 லட்சம் கொடுப்பேன் என்றார். ஆனால், தற்போது வரை தரவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, கேஸ் விலை குறைப்பு என பொய்யை மட்டுமே சொல்லி, 10 ஆண்டுகள் பாஜக ஆட்சி செய்துவிட்டது.
பாஜகவின் வாக்குறுதிகள் மக்களுக்கானது அல்ல. பணக்காரர்களுக்கானது. சிலிண்டர் விலை 400 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது ஆயிரம் ரூபாயாகிவிட்டது. 10 ஆண்டுகளாக கேஸ் விலையை அதிகரித்து விட்டு, தற்போது தேர்தல் வந்ததும் 100 ரூபாயை குறைக்கின்றனர். பாஜகவின் பொய்கள் எடுபடாத ஒரே மாநிலம், தமிழ்நாடுதான். பகுத்தறிவு அதிகம் உள்ளவர்கள் என்பதால்தான் தமிழ்நாட்டில் பாஜகவால் காலுன்ற முடியவில்லை” என்று நடிகர் போஸ் வெங்கட் தெரிவித்தார்.
Read More : சாதிவாரி கணக்கெடுப்பு..!! பாஜகவோடு பாமக கூட்டணி வைத்தது எப்படி..? எடப்பாடி பழனிசாமி கேள்வி..!!