Stalin: அமைதியை விரும்பும் கோவை மக்களே பாஜக போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி, வளர்ச்சி என அனைத்தும் போய்விடும் என்று முதலமைச்சர் மு.கஸ்டாலின் கடுமையாக பேசியுள்ளார்.
கோவையில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தனர். அப்போது பேசிய முதல்வர், பாஜக, பிரதமர் மோடி, அதிமுக, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்தார். கோவையில் பாஜக வேட்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடும் நிலையில், கோவையில் பாஜகவை நுழைய விடக்கூடாது என ஸ்டாலின் கூறினார்.
10 ஆண்டுகள் ஆட்சி செய்தும் சாதனைகள் என்று தமிழகத்துக்கு சிறப்பு திட்டங்கள் என்று எதையும் சொல்ல முடியாமல் அவதூறு செய்யும் பிரதமர் ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம், பத்தாண்டுகள் தமிழகத்தைச் சீரழித்த பழனிசாமி. நடப்பது இந்தியாவை யார் ஆளவேண்டும் என்பதற்கான நாடாளுமன்ற தேர்தல். இந்தியா ட்டணிதான் ஆளவேண்டும் என்று நாம் சொல்கிறோம். ஆனால், அதிமுகவைப் பொறுத்தவரை, யார் ஆளவேண்டும் என்று சொல்லாமல் யார் ஆளக்கூடாது என்றும் சொல்லாமல், யார்தான் உண்மையான எதிரி என்றே தெரியாமல், எதற்காகத் தேர்தலில் நிற்கிறோம் என்ற தெளிவே இல்லாமல், கள்ளக்கூட்டணிக்கு ஆதாயம் தேடித்தரக் களத்துக்கு வந்திருக்கிறார் பழனிசாமி.
தன்னைச் சுற்றியிருந்த அத்தனை பேரையும் முதுகில் குத்திய பழனிசாமி, பாஜகவின் கூட்டணி முறிந்துவிட்டது என்று சொன்னார். சரி ஏன் எதிர்த்து பேசவில்லை என்று நாங்கள் கேட்டால், பாஜகவை எதிர்த்துப் பேச முடியாது அது கூட்டணி தர்மம் என்று சொல்கிறார். இப்படிப்பட்டவர்களை பற்றி என்ன பேசுவது? ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால், “சிம்பிளி வேஸ்ட்”.
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மிகப்பெரிய தொழில் நிறுவனம், 6500 கோடி ரூபாய் முதலீட்டில் கோவையை சேர்ந்த பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் முதலீட்டை மேற்கொள்வதாக முடிவானது. தமிழக அரசும் இதற்கான எல்லா பேச்சுவார்த்தைகளும் முடிந்த பிறகு, அவர்களை மிரட்டி அந்தத் தொழில் திட்டத்தை குஜராத்துக்கு மாற்றிவிட்டார்கள். இதுதான் கோவைக்கான பாஜகவின் போலிப் பாசம். எதிர்காலத்தில், மிகப் பெரிய வாய்ப்புகளைத் தரும், செமிகண்டக்டர் தொழில் திட்டத்தை குஜராத் மாநிலத்துக்கு மிரட்டி மடைமாற்றியது பாஜக தான்.
எப்படி கூச்சமே இல்லாமல் ஓட்டு கேட்டு வருகிறீர்கள்? கோவையில் இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா? கோவை மக்கள் மேல் ஏன் உங்களுக்கு இவ்வளவு வன்மம்? கோவை மக்கள் அமைதியை விரும்பக் கூடிய மக்கள். அமைதியான இடத்தில்தான் தொழில் வளரும், தொழில் வளர்ச்சி இருக்கும், நிறுவனங்களை நடத்த முடியும். பாஜக போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி போய்விடும். தொழில் வளர்ச்சி போய்விடும். நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியாது.
Readmore: PM MODI: “புனித மாதத்தில் எதிர்க்கட்சியினர் அசைவம் சாப்பிடுகிறார்கள்”… மனம் வருந்திய மோடி.!