fbpx

#Job Notification: BOB வங்கியில் வேலைவாய்ப்பு…! டிகிரி முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Asst. Vice President – Acquisition & Relationship Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு தொடர்புடைய பாடத்தில்; Diploma, Chartered Accountant, Graduate Degree அல்லது Post Graduate DegreeB.E அல்லது B.Tech ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 2 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு பொதுப்பிரிவில் 600 ரூபாய் ஆகவும், SC, ST, PWD மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு 100 ரூபாய் ஆகவும் விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 4.08.2022 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info : https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/notification-reopening-of-application-window-14-26.pdf

Also Read: “செம வாய்ப்பு” தமிழக அரசு சார்பில் சுய வேலைவாய்ப்பு கடன் திட்ட பிரத்யேக விழிப்புணர்வு முகாம் நடைபெறும்…! ஆட்சியர் அறிவிப்பு

Vignesh

Next Post

மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பால், கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

Tue Jul 19 , 2022
கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டதை தொடர்ந்து, கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே, அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணிகள் துவைக்கவோ, மீன்பிடிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என்றும் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பற்ற கரையோரங்கள் […]
மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பால், கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

You May Like