fbpx

40 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டவரின் வயிற்றில்இருந்து வளர்ந்த அத்திமரம்

கொலைசெய்யப்பட்டு 40 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டஅவரது உடலில் வயிற்றிலிருந்து அத்திரமரம் வளர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறு வயதில் நாம் சாப்பிட்ட பழங்களின் விதையை விழுங்கிவிட்டால் ’போச்சு உன் வயிற்றில் மரம் வளரப்போகுது’ என நண்பர்கள் கூறுவார்கள். அதைப்போல இங்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது.

துருக்கியில் கடந்த 1974ம் ஆண்டு அகமது ஹெர்குனே என்பவர் கொலை செய்யப்பட்டார். 40 ஆண்டுகளாக அவரது உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. இவர் 1974ல் கிரேக்க சைப்ரஸ் துருக்கிய சைப்ரஸ்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் கலவரத்தில் நடந்த போரினால் கொல்லப்பட்டனர். இதில் மற்ற இரண்டு பேரின் உடல்கள் கிடைக்கப்பட்டுவிட்டது.

ஹெர்குனேவின் உடலை கண்டுபிடிக்கமுடியவில்லை. மேலும் அவரை ஒரு குகைக்குள் வைத்து வெடிகுண்டுகளை வீசி கொலை செய்துள்ளனர். பல இடங்களில் பல ஆண்டுகள் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர் தலைமறைவாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

இந்நிலையில் துருக்கியின் மலைப்பகுதியில் ஒரே ஒரு அத்தி மரம் வளர்ந்துள்ளது. இதைக் கண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சர்யம் . எங்குமே கிடைக்காத அத்திமரம் அதுவும் எப்படி இந்த இடத்தில் வளர்ந்துள்ளது என்று ஆராய்ச்சி நடத்தி வந்தனர். இந்த குழப்பங்களுக்கு இன்று முடிவு கிடைத்துள்ளது.

இந்த மரத்தை ஆய்வாளர்கள் தோண்டி எடுத்து ஆராய்ச்சி செய்ய முடிவு செய்தனர்.அப்போது தோண்டியபோது அதிர்ச்சியானவிஷயம் காத்திருந்தது. ஒரு சடலத்தின் வயிற்றில் இருந்து அந்த மரம் வந்துள்ளது. ஆம், அதிர்ச்சியான மற்றும் ஆச்சர்யமான விஷயம்தான்.. அந்த உடலை எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இதில் 40 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தஹெர்கியூன் என்பவர் உடல் என்பது தெரியவந்தது. அவர் இறப்பதற்கு முன்பு அத்திப்பழத்தை சாப்பிட்டுள்ளார். இதனால் வயிற்றில் இருந்த விதை மூலம் வளர்ந்து பெரிய மரமாகி இருப்பது தெரியவந்தது. பிரேத பரிசோதனையிலும் இது உறுதியாகி உள்ளது. அவர் சாப்பிட்ட அத்திப்பழம் மூலமாக அவரது உயிரிழப்புக்காண காரணமும் அவர் உடலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Next Post

41 MLA-க்கள் நேரடி தொடர்பு..! கைதாகிறாரா மம்தா..? பாஜக தலைவரின் பேச்சால் அரசியலில் பரபரப்பு..!!

Wed Sep 28 , 2022
மேற்குவங்க பாஜக தலைவர் பேசியிருக்கும் கருத்தால், திரிணாமுல் காங்கிரஸில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கிலும், மூத்த தலைவர் அனுப்பிரதா மோந்தல் கால்நடை கடத்தல் வழக்கிலும் கைது செய்யப்பட்டு வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால், அக்கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது. […]

You May Like