fbpx

பரபரப்பு.! 15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! மாநிலம் முழுவதும் தீவிர சோதனை.!

கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் உள்ள 15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒடுக்கப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தீவிரமான சோதனை நடைபெற்று வருகிறது.

பெங்களூரில் இயங்கி வரும் 15 பள்ளிகளுக்கு இன்று காலை மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் முழு வீச்சில் இறங்கி தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து குறிப்பிட்ட 15 பள்ளிகளில் உள்ள மாணவர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு அவர்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்களுடன் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பெங்களூரு போலீஸ் கமிஷனர் “பெங்களூருவில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது முதல் முறையல்ல” என தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்பு ஒரே நேரத்தில் 30 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் முழு வீச்சில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Next Post

"சொட்ட சொட்ட நனையுது..., ஏரோப்ளேனா இல்ல டவுன் பஸ்ஸா."? பயணியின் வீடியோவால் வெளியான அவலம்.!

Fri Dec 1 , 2023
மழைக்காலங்களில் பேருந்தில் மழை நீர் கசிவது தொடர்பாக கேள்விப்பட்டிருப்போம். ஆனால் விமானத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ விமானங்களின் தரம் குறித்து மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. இங்கிலாந்து தலைநகரான லண்டனில் இருந்து பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்டர் நகருக்கு பயணம் மேற்கொண்ட ஏர் இந்தியா விமானத்தில் தான் இந்த மோசமான அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பான வீடியோ […]

You May Like