fbpx

#Breaking : முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட முக்கிய தகவல்..

கடந்த 12-ம் தேதி மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடர் குறித்து முக.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. பின்னர், அவர் வீடு திரும்பியபோது உடற்சோர்வு இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.. இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் தகவல் தெரிவித்திருந்தார்.. மேலும், அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. சி.டி. ஸ்கேன் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. கொரோனா தொடர்பான அறிகுறிகள் குறித்து தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதாகவும் காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது..

Maha

Next Post

தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

Thu Jul 14 , 2022
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசைகாற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு வடதமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, […]

You May Like