விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன் பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 5 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த வெடிவிபத்தில் 4 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிவிபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலைக்கு தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு ஆலை விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின.