fbpx

’ஒரு சேர் எடுத்துட்டு வர்ற’..!! தொண்டரை நோக்கி கல்லை தூக்கி எறிந்த அமைச்சர் நாசர்..!! சர்ச்சை வீடியோ

நாற்காலி எடுத்து வர தாமதம் ஆனதால் கோபமடைந்த அமைச்சர் நாசர், திடீரென கல்லை எடுத்து எறிந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

திருவள்ளூர் அருகே முதலமைச்சர் முக.ஸ்டாலின் கலந்துகொள்ளும் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது. இந்தப் பொதுக்கூட்டத்தில் பல்வேறு அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். இதற்காக பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இடத்தில் இன்று காலை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி எஸ்.எம். நாசர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அமைச்சர் நாசர் அமர்வதற்கு நீண்ட நேரம் ஆகியும் நாற்காலி எடுத்து வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கடுப்பான அமைச்சர் நாசர், நாற்காலி எடுத்து வரச் சென்றவர்கள் மீது கல்லை எடுத்து எறிந்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், “சேர் எடுத்துட்டு வா போ.. ஒரு சேர் எடுத்துட்டு வர்ற.. யார்ட்ட” என்று பேசியபடி அமைச்சர் நாசர் ஒரு கல்லை தூக்கி எறியும் காட்சி பதிவாகியுள்ளது. அங்கு இருந்தவர்கள் அமைச்சர் நாசரின் இந்தச் செயலை பார்த்து சிரித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. திமுக அமைச்சர்கள் சிலர் பேசியது ஏற்கனவே சர்ச்சைக்குள்ளான நிலையில், தற்போது அமைச்சர் எஸ்.எம். நாசரின் செயலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

விமானத்தில் பணிப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணி.. பாதியில் இறக்கப்பட்ட சம்பவம்..!

Tue Jan 24 , 2023
டெல்லியில் இருந்து ஹைதராபாத் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணி ஒருவர் விமான பணிப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அந்த பயணியை டெல்லி போலீசார் கைது செய்தனர். மேற்படி, குற்றம் சாட்டப்பட்ட நபர் அப்சர் ஆலம் என்று போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அப்சர் ஆலம் மற்றும் அவரோடு மற்றொரு நபரும் ஒன்றாக சேர்ந்து பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில், அப்சர் விமான பணிப்பெண்ணிடம் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்சர் மற்றும் […]

You May Like