fbpx

தலைநகரில் கொடூரம்..!! சிறுவனை கூட்டு பலாத்காரம் செய்து ரோட்டில் வீசிச்சென்ற 4 கொடூரன்கள்..!!

டெல்லியில் 14 வயது சிறுவன் நான்கு பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு ரோட்டில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சமீபகாலமாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வட மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான குற்றங்கள் பதிவாகிறது. அதுவும் சிறுவர், சிறுமிகளை குறிவைத்து நடக்கும் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், குறிப்பாக கூட்டு பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் போதைப்பொருள் பயன்பாடு, உளவியல் பிரச்சனைகள் மற்றும் பாலியல் வறட்சி ஆகியவற்றால் ஏற்படுகின்றன.

தலைநகரில் கொடூரம்..!! சிறுவனை கூட்டு பலாத்காரம் செய்து ரோட்டில் வீசிச்சென்ற 4 கொடூரன்கள்..!!

இந்நிலையில், டெல்லியில் சிறுவன் ஒருவன் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புது டெல்லி பகுதியில் 12 வயது சிறுவனை 4 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன், அந்த சிறுவனை இரும்பு கம்பிகளைக் கொண்டு கொடூரமாகத் தாக்கி உள்ளனர். பின்னர் அப்படியே ரோட்டில் தூக்கி வீசிச் சென்றுள்ளனர். இதுகுறித்து டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லியில் ஒரு ஆண் குழந்தைக்கு கூட பாதுகாப்பு இல்லை” என தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மகளிர் ஆணையம் விசாரணையை மேற்கொண்டுள்ளதாகவும், டெல்லி காவல்துறையிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தலைநகரில் கொடூரம்..!! சிறுவனை கூட்டு பலாத்காரம் செய்து ரோட்டில் வீசிச்சென்ற 4 கொடூரன்கள்..!!

மேலும், ’டெல்லியில் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. 12 வயது சிறுவனை 4 பேர் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி அந்த சிறுவன் இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டுள்ளான். பாதி உயிரிழந்த நிலையில், ரோட்டிலேயே தூக்கி வீசப்பட்டுள்ளான். இந்தச் சம்பவம் குறித்து போலீசில் வழக்குப்பதிவு செய்துள்ளோம். இதுவரை, இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி போலீசாருக்கு மகளிர் குழு நோட்டீசும் அனுப்பி உள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்’ என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரூ.1,000 கோடி சம்பளமா..? ஒருவழியாக மௌனம் கலைத்த சல்மான் கான்..

Wed Sep 28 , 2022
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பொதுவாக ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.. அது எந்த மொழியாக இருந்தாலும் சரி.. அதிலும் குறிப்பாக ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.. இந்நிலையில் பிக்பாஸ் 16 ஹிந்தி நிகழ்ச்சி வரும் 1-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த சீசனையும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார்.. அவர் இந்த ஆண்டு பிக்பாஸ் 16 நிகழ்ச்சியை தொகுத்து […]

You May Like