வேலூர் மாவட்ட பகுதியில் உள்ள கிளித்தான் பட்டறையில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருபவர் ராஜேஷ் (28) என்பவர். இவர் தனது மனைவி திலகாவுடன் (28) வசித்து வருகிறார்.
ராஜேஷின் நண்பரான சந்தோஷ் (28). அடிக்கடி வீட்டிற்கு சென்று வந்த நிலையில் முறையில் சந்தோஷுக்கும் திலகாவுக்கும் இடையே தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவே நாளடைவில் இருவருக்குமிடையில் காதலாக மாறிய நிலையில், கள்ளக்காதல் ஜோடி அடிக்கடி தனிமையில் பலமுறை உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்றைய தினத்தில் கள்ளக்காதல் ஜோடி காந்திநகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் கள்ளக்காதலியான திலகாவை காது, தலை என பல பகுதியில் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
படுகாயமடைந்த திலகா கத்தி கூச்சலிட்டுள்ளார். இவரின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் திலகாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து சந்தோஷை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.