பாகிஸ்தானில் சுரங்கத் தொழிலாளர்கள் சென்ற பேருந்து குண்டுவெடி விபத்தில் சிக்கியதில் 11 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் தனிநாடு கோரி போராடி வரும் மக்கள் நிறைந்த மாகாணமாக பலூசிஸ்தான் இருந்து வருகிறது. அங்கு, ஹர்ணி பகுதியில் அமைந்துள்ள சுரங்கத்தில் பணியாற்றுவதற்காக, சுரங்கத் தொழிலாளர்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர். அப்போது, பேருந்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த பயங்கர சம்பவத்தில் 11 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுவரையில் இந்த சம்பவத்திற்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதேசமயம், ரிமோட் கன்ட்ரோல் மூலம் இந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்திருக்கலாம் என போலீசர் சந்தேகிக்கின்றனர்.
பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஹர்னாய் நகரில் சீன நாட்டுடனான ஒப்பந்தத்துடன் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த நிலக்கரி சுரங்கத்தில், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வேலை நடந்து வரும் நிலையில், இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
Read More : மணிப்பூரில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி..!! மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு..!!