fbpx

அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை திட்டம்…! கடைசி நாள் நெருங்கிவிட்டது… உடனே இதை செய்ய வேண்டும்…!

அரசு பள்ளிகளில் படித்து கலை அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில், இது வரை 1லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்து கலை அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் வகையில் “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உதவித்தொகை திட்டம்” அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவிகள் கல்லூரிகளில் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மூலமாக, நாளை மாலை வரை விண்ணப்பிக்கலாம். penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் மாணவிகள் பதிவு செய்யலாம்.

பள்ளியில் படித்த விவரங்கள், ஆதார், வங்கி கணக்கு விவரம், கல்வி சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். இத்திட்டத்தில் இதுவரை 1 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். கல்லூரிகள் திறக்கப்பட்டு ஒரு மாத காலத்துக்குள் திட்டம் தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்காக இளநிலை பயிலும் மாணவிகளிடம் இருந்து அவர்களது உரிமை விபரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் பயின்ற அரசு பள்ளி விவரங்கள் கொடுக்க வேண்டும். மேலும் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பள்ளி மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இத்திட்டத்தினை, தொழில்நுட்பக்‌ கல்வி ஆணையர்‌ மற்றும்‌ கல்லூரிக்‌ கல்வி இயக்குநர்‌ அரசு, அரசு உதவி பெறும்‌ அல்லது சுயநிதி கல்லூரி வாரியாக கண்காணித்து உடனுக்குடன்‌ விவரங்கள்‌ பதிவிடப்படுவதை உறுதி செய்து அனைத்து மாணவியர்‌ விவரங்களும்‌ நாளை மாலைக்குள் பதிவிடப்பட்டிருக்க வேண்டும்‌. மேலும்‌, ஒவ்வொரு நாளும்‌ மாலை 5.00 மணிக்குள்‌ கல்லூரி வாரியாக பதிவிடப்பட்ட மாணவியரின்‌ எண்ணிக்கை குறித்த அறிக்கையினை தவறாது அரசுக்கு அனுப்ப வேண்டும்‌.

Also Read: ரேஷன் அட்டையில் திருத்தம்…! இன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை மட்டுமே…! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!

Vignesh

Next Post

உச்ச கட்டம்... மாணவர்களே தவறாமல்‌ தடுப்பூசி போடணும்...! முகக்கவசம் இல்லன்னா ரூ.500 அபராதம் வசூல்...!

Sat Jul 9 , 2022
தருமபுரி மாவட்டத்தில்‌ கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே தகுதி உள்ள நபர்கள் அவசியம் தடுப்பூசி செலுத்திககொள்ள வேண்டும். இது குறித்து தருமபுரி ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முழுவதும்‌ கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில்‌ கட்டுபடுத்திட தமிழக முதல்வர்‌ ஆணையின்படி “மெகா தடுப்பூசி முகாம்‌” நடத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில்‌ கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா […]

You May Like