fbpx

அட்டகாசம்.‌‌.. அதிக திறன் கொண்ட சூரிய மின்தகடுகள் திட்டம்…! மத்திய அரசு ஒப்புதல்…!

அதிக திறன் வாய்ந்த சூரிய மின் தகடுகளின் ஜிகா வாட் அளவிலான உற்பத்தி திறனை அடைவதற்கான தேசிய அதிக திறன் கொண்ட சூரிய மின்தகடுகள் திட்டத்தில் ரூ 19,500 கோடி செலவிலான உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் பரிந்துரைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இறக்குமதியை சார்ந்து இருப்பது குறையும்.

தற்சார்பு இந்தியா இயக்கத்தின் முன்னெடுப்புகளை வலுப்படுத்தி, வேலைவாய்ப்பை உருவாக்கும். சூரிய மின் தகடுகள் உற்பத்தியாளர்கள் வெளிப்படையான முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உள்நாட்டு சந்தையிலிருந்து அதிக திறன் வாய்ந்த சூரிய மின் தகடுகள் விற்பனைக்காக சூரிய மின்தகடுகள் உற்பத்தி ஆலைகள் தொடங்கப்பட்ட பிறகு, 5 ஆண்டுகளுக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டம் அளிக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் ரூபாய் 94 ஆயிரம் கோடி அளவிற்கு நேரடி முதலீடு கிடைக்கும். 1,95,000 பேருக்கு நேரடியாகவும், 7,80,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

Vignesh

Next Post

BOB வங்கியில் டிகிரி முடித்த நபர்களுக்கு வேலை வாய்ப்பு…! விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்…!

Sun Sep 25 , 2022
பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Relationship Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு Computer Science, IT பாடப்பிரிவில் Graduate, M.Sc, BE, MCA, MBA ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக […]

You May Like