fbpx

AC ஓடும்போது சீலிங் ஃபேன் பயன்படுத்தினால் மின் கட்டணத்தை குறைக்கலாமா..? அட ஆமாங்க..!! விவரம் இதோ..!!

AC ஓடும் போது சீலிங் ஃபேன்களை பயன்படுத்தக்கூடாது என்று சிலர் சொல்வார்கள். ஏனெனில்.. சீலிங் ஃபேன்கள் அனல் காற்றை கீழேதள்ளும். ஆனால், சீலிங் ஃபேனை ஏசியுடன் பயன்படுத்தும்போது, ஃபேன் அறையில் உள்ள காற்றையே தள்ளுகிறது. இது அறையில் உள்ளவர்களை குளிர்ச்சியாகவும் வசதியாகவும் ஆக்குகிறது. ஒரு சீலிங் ஃபேன் அறையின் ஒவ்வொரு மூலையிலும் குளிர்ந்த காற்றைப் பரப்புகிறது. அத்தகைய சூழ்நிலையில் ஏசி அதிகம் வேலை செய்ய வேண்டியதில்லை. ஆனால், அறையிலிருந்து குளிர்ந்த காற்று வெளியேறாமல் இருக்க அனைத்து ஜன்னல்களையும் கதவுகளையும் கவனமாக மூடவும்.

உண்மையில், ஏசியுடன் சேர்த்து ஃபேனையும் பயன்படுத்தினால் மின்சாரத்தை சேமிக்க முடியும். இதற்கு, ஏசியில் வெப்பநிலை 24 முதல் 26 வரை அமைக்கப்பட வேண்டும் மற்றும் மின்விசிறியை குறைந்தபட்ச வேகத்தில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அறை விரைவில் குளிர்ச்சியடையும். அதே நேரத்தில் ஒரு விசிறி அறை முழுவதும் காற்றை பரப்புகிறது. இது அறையை விரைவாக குளிர்விக்க உதவுகிறது. உதாரணமாக, ஆறு மணி நேரம் ஏசி பயன்படுத்தினால். 12 யூனிட் செலவாகும், ஆனால் ஏசியுடன் மின்விசிறியும் பொருத்தினால் 6 யூனிட் மட்டுமே செலவாகும். இதன் மூலம் ஏசி பயன்படுத்துவதற்கான மின்சார செலவு மிச்சமாகும்.

Read More : புதையலுக்காக தோண்டப்பட்ட கோயில் கருவறை..!! நேரில் பார்த்து ஷாக்கான பூசாரி..!! ஒன்று திரண்ட ஊர் மக்கள்..!! பரபரப்பு..!!

Chella

Next Post

விருதுநகரில் ராதிகா சரத்குமார் போட்டி..!! பாஜக 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலில் அறிவிப்பு..!!

Fri Mar 22 , 2024
விருதுநகரில் ராதிகா சரத்குமார், வடசென்னையில் பால் கனகராஜ் போட்டியிடுவதாக பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் 9 பாஜக வேட்பாளா்களின் முதல்கட்ட பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இந்நிலையில், 15 வேட்பாளர்களைக் கொண்ட இரண்டாவது பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார், சிதம்பரம் (தனி) தொகுதியில் கார்த்தியாயினி, திருவள்ளூர் (தனி) தொகுதியில் பொன். வி. பாலகணபதி, வட சென்னையில் பால் கனகராஜ் ஆகியோர் […]

You May Like