fbpx

என்ன…..! ஐஸ்கிரீம் சாப்பிட்டால், கேன்சர் வருமா….?

நேற்று பிறந்த குழந்தை முதல், நாளை இறக்கப் போகும் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிரியமான ஒன்றாக இன்றளவும் இருந்து வருகிறது ஐஸ்கிரீம். இப்படி அனைத்து தரப்பு மக்களும் விரும்பி உண்ணும் ஒரு பொருளாக இருக்கும் ஐஸ்கிரீமில் பல்வேறு தீமைகள் நிறைந்துள்ளது. பொதுவாக நாம் ஒரு பழமொழியை சொல்வோம்.அதாவது அளவுக்கு மீறினால், அமிர்தமும் நஞ்சு என்று சொல்வதைப் போல இதிலும் பல்வேறு தீமைகள் ஒளிந்திருக்கிறது. அது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

நாம் பல்வேறு சமயங்களில், நம்முடைய உடலில் ஏற்படும் வலியை குறைப்பதற்காக வலி நிவாரணியை பயன்படுத்துவோம். அது மருத்துவ குணம் சார்ந்தது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த வலி நிவாரணியை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு பொருளை இந்த ஐஸ்கிரீம் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள் என்று சொன்னால், உங்களால் நம்ப முடிகிறதா? அந்த வேதிப்பொருளை இந்த ஐஸ்கிரீம் தயாரிப்புக்கு பயன்படுத்துவதன் காரணமாக, இந்த ஐஸ்கிரீம் உடலுக்கு பல்வேறு தீமைகளை விளைவிக்க கூடியது என்று கூறப்படுகிறது.

அதோடு இந்த ஐஸ்கிரீம் மக்களால் அதிகமாக விரும்பி உண்ணப்படுவதால், இதன் காரணமாக, மக்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல, குடல் புண், ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், கல்லீரல் பாதிப்படையவும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் நெஞ்சு வலி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், இதயத்திலும் வலி உண்டாவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல், மனிதர்களுடைய சிறுநீரக பையையும் இது நேரடியாக பாதிக்கிறது.

இந்த ஐஸ்கிரீம் மிக விரைவில் உருகிப் போகாமல் இருப்பதற்காக, நாம் அன்றாடம் நீராடுவதற்கு பயன்படுத்தப்படும் ஷாம்பூ மற்றும் சோப்புகளில் பயன்படுத்தப்படும் பாலிசார்பேட் 80 என்ற ஒரு வித வேதிப்பொருளை பயன்படுத்துகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது. ஆகவே, உடலுக்கு இவ்வளவு தீங்கு விளைவிக்கக் கூடிய ஐஸ்கிரீமை மக்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவதால், அதை விட்டு அவ்வளவு எளிதில் யாராலும் வெளியே வந்துவிட முடியாது. இருந்தாலும், மெல்ல, மெல்ல ஐஸ்கிரீம் சாப்பிடுவதில் இருந்து நம்மால் விலக முயற்சிக்க முடியும் அல்லவா? மெல்ல, மெல்ல ஐஸ்கிரீம் சாப்பிடுவதை மக்கள் குறைத்துக் கொள்வது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும்

Next Post

Disease X..! எதிர்கால நோய்களின் பட்டியலில் சேர்ப்பு!... உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!... மக்கள் அச்சம்!

Wed Sep 27 , 2023
எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடிய நோய்களின் பட்டியலை உலக சுகாதார அமைப்பு உருவாக்கியுள்ளது. அதில், Disease X நோயும் இடம்பெற்றுள்ளதால் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவிட்-19 போன்ற மற்றொரு தொற்றுநோயை ஏற்படுத்தி லட்சக்கணக்கான மக்களைக் கொல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நோய்களின் பட்டியல் உருவாக்கபப்ட்டுள்ளது. இரு நாட்களுக்கு முன் Disease X என்ற நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது மில்லியன் கணக்கான மக்களை கொல்லக்கூடியது என்றும் இங்கிலாந்து சுகாதார நிபுணர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்தநிலையில், டிஸீஸ் எக்ஸ் […]

You May Like