fbpx

மின் வாரியத்தில் 5,318 காலி இடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து…! மின்சார வாரியம் அதிரடி அறிவிப்பு…!

இளநிலை உதவியாளர், உதவிப் பொறியாளர், கள உதவியாளர், உதவி கணக்கு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 5,318 இடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட அறிவிப்பாணைகள் அனைத்தும் தமிழக அரசு ரத்து செய்துள்ளது .

நாடு முழுவதும் கொரோனா பரவால் அதிகரித்து வந்ததன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு அரசு தேர்வுகள் நடத்தாமல் ஒத்திவைக்கப்பட்டன. இதில் பல தேர்வுகள் சமீபத்தில் தான் நடத்தி முடிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் கடந்த ஆண்டு இளநிலை உதவியாளர், உதவி பொறியாளர் உட்பட 5,318 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிட்டது. கடந்த 2021 ஏப்ரல் மே மாதத்தில் நடக்க இருந்த தேர்வுகள் கொரோனா மற்றும் தேர்தல் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தத் தேர்வுகள் அனைத்தையும் டிஎன்பிஎஸ்சி நடத்தும் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; மின்சார வாரியத்தின் ஆட்களை சேர்ப்பதற்கான அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. இளநிலை உதவியாளர், உதவிப் பொறியாளர் உள்ளிட்ட 5,318 இடங்களை நிரப்ப வெளியிட்ட அறிவிப்பாணைகள் அனைத்தும் ரத்து செய்யபடுகிறது. கணினி வழித்தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் விண்ணப்பித்தவர்களின் கட்டணம் திருப்பி செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

Image

Also Read: Polytechnic மாணவ, மாணவிகளுக்கு ரூ.50,000 உதவித்தொகை..‌.! உடனே விண்ணப்பிக்கவும்….! ஆட்சியர் அறிவிப்பு

Vignesh

Next Post

அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.. எந்த மாவட்டத்தில் தெரியுமா..?

Wed Jul 6 , 2022
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தியாகிகளின் நினைவு நாள், திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் போன்ற தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.. அதன்படி மாவட்டத்தில் […]

You May Like