பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஒரு வாரம் முடிவதற்குள் பரபரப்பான பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. எப்போதுமே பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரத்திற்குப் பிறகு தான் சண்டைகள், எலிமினேஷன் எனப் பல விஷயங்கள் நடக்கும். ஆனால், இந்த முறை மிகவும் விரைவாகவே நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்னும் சண்டைகள் நடைபெறவில்லை என்றாலும், எலிமினேஷன் நடைபெற்று ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளார். அதாவது நிகழ்ச்சி தொடங்கி ஒரே நாளில் சாச்சனா வெளியேறினார். ஒரே நாளில் அவர் வெளியேறியது ரசிகர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், மேலும் ஒரு போட்டியாளர் வீட்டை விட்டு வெளியேற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அவர் வேறு யாரும் இல்லை பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் தான். இவர், வீட்டை விட்டு வெளியேற முக்கியமான காரணமே அவருடைய உடல் நிலை மிகவும் மோசமான காரணத்தால் தான். வீட்டிற்குள் அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பதால் அவருடைய உடல் நலம் கருத்தில் கொண்டு அவரை வீட்டை விட்டு வெளியேற்றவும் அதிக வாய்ப்புகள் இருக்கிறதாம். வீட்டிற்குள் இதே மாதிரியான உடல் நலக் குறைவால் இருந்தால் கண்டிப்பாக அவரால் வேலை செய்ய முடியாது. விளையாட்டிலும் கவனம் செலுத்த முடியாது.
வீட்டில் நடக்கவே முடியாத அளவுக்கு அவருடைய உடல் நிலை மிகவும் மோசமாக இருக்கிறதாம். சக போட்டியாளர்கள் அவருக்கு உதவி செய்து நடத்தி அழைத்துச் செல்வது போல வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எனவே, ரவீந்தர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவாரா? அல்லது வீட்டிற்குள் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி, சிகிச்சை பெற்றுக்கொண்டு விளையாட்டைத் தொடர்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இதற்கிடையே, அவர் இந்த வார நாமினேஷனில் இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : தீபாவளி போனஸ்..!! 2 முக்கிய அறிவிப்பு வரப்போகுது..!! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!!